Thursday, November 28, 2013

Tamils ​​have been in favor of a prime minister V.P.Singh தமிழர்களுக்கு சாதகமாக நடந்து கொண்ட ஒரு பிரதமர்

Tamils ​​have been in favor of a prime minister தமிழர்களுக்கு சாதகமாக நடந்து கொண்ட ஒரு பிரதமர்
வி.பி.சிங்

சமூகநீதி காவலர் வி.பி.சிங் நினைவு நாள் இன்று

Monday, November 25, 2013

Girls School Uniform குட்டைப் பாவாடை

Girls School Uniform

Tamil Nadu school girls uniform

மாற்றம் வேண்டும்....
*******************

மேற்கத்திய நாடுகளைப் போல, தற்போது இங்கும் பெரும்பாலான பள்ளிகளில் மாணவிகளின் சீருடையாகக் குட்டைப் பாவாடையே இருக்கிறது.

இவ்வாறு குட்டைப் பாவாடை அணிவது - ஆண்களைச் சுண்டி இழுக்கும் வகையிலும், ஆபாசத்தைத் தூண்டும் வகையிலும் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டை எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது.

சிறிய வயதிலேயே வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் கூடிய உடம்புவாகோடு அணிகிற இந்த மாதிரியான உடை, பொது இடங்களில் பலரது கவனத்தையும் சிதறடிக்கிறது என்கிற கருத்தை வீண்வாதம் என்று வெறுத்து ஒதுக்க முனைவது வீம்புக்காக மட்டுமானதாகவே இருக்கமுடியும்.

ஒரு மாணவியின் அப்பா, தனது மகளை அழைத்துப் போவதற்காக தனது ஸ்கூட்டரில் வந்தார். குட்டைப் பாவாடை அணிந்திருந்த அந்த மாணவி அந்த ஸ்கூட்டரின் பின் சீட்டில் ஏறி உட்கார முனையும்போது- அத்தனை விழிகளும் அங்குதான் மொய்த்தன.

இதில் கட்டாயம் மாற்றம் வேண்டும்.

இது பெண்களின் சுதந்திரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற எண்ணமோ அல்ல.

அந்தச் சகோதரிகளின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டே இந்தக் கருத்து,

தமிழகத்தில்....

மாணவியரையும், மாணவர்களையும் பாதிக்கும் வகையிலான உடைகளை ஆசிரியர்கள், ஆசிரியைகள் அணியக் கூடாது. அது பொதுமக்கள் மத்தியிலும் தவறான கருத்துக்களை ஏற்படுத்த வழி வகுத்து விடும் என்று.....

ஆசிரியைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிய தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்குநரகம்.....

இதிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்லது 805_s.jpg

தமிழின் சிறப்புகள் - Merits of Tamil

Mandir of hindu=6words.
masjid of muslim=6words.
church of christ=6words
geeta of hindu =5words
quran of muslim =5words.
bible of christ =5words.

all religion  and books says the same 6-5=1 (God IS ONE)

Saturday, November 23, 2013

Indian Congress and Srilanka காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா

Indian Congress and Srilanka காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா

Karikalan கரிகாலன்தான் உண்மையான மக்கள் தலைவன்


ராஜராஜசோழன் போல் ஒரு பெரிய கோயிலை மட்டும் கட்டி வைக்காமல் மக்களுக்காக கல்லணையை கட்டிய கரிகாலன்தான் உண்மையான மக்கள் தலைவன்! அதுவும் மலைகளே இல்லாத சமதரையில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அணை கட்டியது பிரமிக்க வைக்கிறது. இது தான் தமிழன் சாதனைகளில் முதலில் குறிக்கவேண்டும்!

@ரா நெடுமாறன்

"வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும் குடி உயர கோல் உயரும்" என்பதை சரியாக புரிந்துகொண்ட மக்களுக்கான மன்னன் கரிகாலன்.

Wednesday, November 20, 2013

Matrimony மாட்டுச் சந்தை

Matrimony tamil facebook share

முன்பெல்லாம் அதிக விலை கொடுத்து மாடுகளை வாங்கும் மாட்டுச் சந்தை அதிகம் இருந்தது, தற்போது அதிக விலை கொடுத்து மணப்பெண்களை விற்கும் இணையதள மேட்ரிமோனி சந்தைகள் அதிகமாகிவிட்டது.

அதிக நகை பணத்தோடு ஒருவர் வீட்டின் எஜமானி என்ற பெயரோடு காலடி எடுத்து வைத்தாலும் பேருக்குத்தான் அவள் எஜமானி...

நிஜத்தில் அவள்

சம்பளம் இல்லா வேலைக்காரி.

#நந்தமீனாள்

Monday, November 11, 2013

Today Status - இன்றைய நிலை

Today Status

இன்றைய நிலை...

பெரிய வீடு
ஆனா பெற்றவர்களுக்கு இடமில்லை...
விலை அதிகமான வாட்ச்
அதை பார்க்க நேரமில்லை...
நிலவை தொட்டாச்சு
ஆனா பக்கத்து வீட்ல யார் இருக்கான்னு தெரியாது...
மெத்த படிப்பு
பகுத்தறிவு இல்லை...
மருத்துவத்தில் முன்னேற்றம்
ஆரோக்கியத்தில் குறைபாடு...
அதிக வருமானம்
நிம்மதி இல்லை...
அதிகம் சாராயம்
குடிநீர் பற்றாக்குறை...
அதிக முகநூல் நட்பு
உயிர் நட்பு இல்லை...
அதிகம் மனிதர்கள்
மனித நேயம் குறைந்து விட்டது..

Popular Posts