Friday, January 31, 2014

கழுதையின் ஆசை Tamil Facebook Share




கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார், "நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய். இதற்கு கழுதை சொன்னது "நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்." கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார். அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார் "நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்." இதற்கு நாய் கூறியது, "கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்" கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார். அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார் "நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்." இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்" கடவுளும் குரங்கின்ஆசையை நிறைவேற்றினார். கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்." இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு. கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு" கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான். அன்று முதல் மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக. கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான். குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான். வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்­கு வித்தைகள் காட்டி மகிழ்விக்கிறான்... இப்ப தெரியுதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு?

Wednesday, January 29, 2014

திருமணமான ஆணின் மீது காதலா? இதோ பெண்களுக்கான சில டிப்ஸ்... tamil facebook girls news

tamil facebook girls news
Tamil girls facebook tips, tamil teenage girls facebook message

திருமணமான ஆணின் மீது காதலா? இதோ பெண்களுக்கான சில டிப்ஸ்...
ஆண் பெண் செக்ஸ்

காதலில் வயப்படுவது என்பது ஒரு அழகான விசயமாகும். அது உங்களுக்கு நடக்கலாம். காதலில் இருக்கும் போது தான் அதன் அழகும் புனிதமும் உங்களுக்கு புரியும். ஆனால் இவரை தான் காதலிக்க வேண்டும் என்று தீர்மானிக்க முடியுமா? நிலையில்லா ஒருவரை காதலிக்கவோ அல்லது சிக்கல்களை உண்டாக்கும் ஒருவரை காதலிக்கவோ வாய்ப்புகள் இருக்கலாம். ஏன், ஏற்கனவே திருமணமான ஒரு ஆணை காதலிக்கவும் கூட வாய்ப்புகள் இருக்கிறது.

ஆனால் அதனை எண்ணி நீங்கள் வெட்கப்பட தேவையில்லை. ஆனால் நீங்கள் விரும்பும் திருமணமான நபர் உங்களை காதலிக்க ஆரம்பிக்கும் போது தான் உண்மையான பிரச்சனைகளே எழும். ஆம், அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவருடன் வைத்திருக்கும் உறவு பெரும் சிக்கலை உண்டாக்கும்.

தனிமையில் இருக்கும் போது கீழ்கூறியவைகளை பற்றி சிந்தித்துப் பாருங்கள். அப்படி செய்கையில் இந்த பொல்லாங்கான விஷயத்திலிருந்து விரைவாகவே மீண்டு வரலாம்.

உங்கள் தன்மானம் எங்கே?
உங்களை யாரவது விரும்பி உங்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் போது நல்ல உணர்வுகள் இருப்பது இயைபு தான். ஆனால் அது உண்மையிலேயே இருக்க வேண்டுமா? நீங்கள் உங்கள் தன்மானத்தை இழக்கிறீர்களா? அவருக்கென ஒரு குடும்பம் உள்ளது. அவர்களுடன் தான் அவர் வாழவும் செய்யப்போகிறார். அவர் உங்களை தீவிரமாக நேசிக்கலாம். ஆனால் உண்மையில் உங்கள் உறவுக்கு வருங்காலம் என்பதே கிடையாது. மேலும் குடும்பத்தை கெடுக்கும் ராட்சசியாக பார்க்கப்படுவீர்கள். இப்படிப்பட்ட உறவால், கண்ணீரையும் சோகத்தையும் தவிர உங்களுக்கு வேறு என்ன கிடைக்கும்? யோசித்து பாருங்கள்.

அவர் தன் மனைவியை விட்டு பிரிவாரா?
அவர் திருமணம் ஆனவர் என்று தெரிந்தும் கூட உங்களிடம் உறவில் ஈடுபட சம்மதித்திருக்கும் பெரிய உள்ளம் கொண்டவரா நீங்கள்? உங்களுக்காக அவர் தன் குடும்பத்தை தூக்கிப் போட்டு கொண்டு வருவார் என்று நம்புகிறீர்களா? அவருக்கென ஒரு வீடு உள்ளது, சொல்லப்போனால் சந்தோஷமான ஒரு வீடு. அவரை பொறுத்த வரை, அவர் ருசித்து உண்ணும் ஒரு துண்டு கேக் மட்டுமே நீங்கள்.

அவர்களின் குழந்தைகள் கதி?
அவரின் மனைவி மற்றும் குழந்தைகளை பற்றி எண்ணிப் பார்த்ததுண்டா? அவர் மனைவி இடத்தில் நீங்கள் இருந்தால் எப்படி உணர்வீர்கள்? இப்படி நீங்கள் செய்யும் நம்பிக்கை துரோகம் உங்களை காலா காலத்திற்கும் ஆட்டி படைக்காதா என்ன? உங்களால் அவர் குடும்பம் பிரிந்த பின், குழந்தைகளின் கதி என்னவாகும்? ஆண்கள் மீதும் வாழ்க்கையின் உறவுகள் மீதும் அவர் மனைவி நம்பிக்கை இழந்திருப்பார் அல்லவா? இவைகளை பற்றியெல்லாம் நீங்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

நீங்கள் இதை விட சிறந்த ஒன்றுக்கு தகுதியானவர்
உங்களுக்கு திருமணமான ஆண் மட்டுமே கிடைத்தாரா? உங்களை காதலிக்கவும் அக்கறையுடன் பார்த்துக் கொள்ளவும் திருமணமாகாத ஒரு ஆண் கூடவா இல்லாமல் போய் விட்டார்? அழகிய, முழுமை பெற்ற பெண் நீங்கள். ஏன் திருமணமாணவரோடு குடியிருக்க விரும்புகிறீர்கள்? இந்த உறவை துண்டித்து விட்டு உங்களுக்காக காத்திருக்கும் திருமணமாகாத ஆணை தேர்ந்தெடுங்கள். தேடி பாருங்கள், உங்களுக்கான நல்ல தேர்வுகள் கண்டிப்பாக இருக்கும்.

காதலின் காதல்
காதல் என்பது முழுமை பெற்றது; உணர்ச்சியை மீறி அது எதையும் பார்க்காது. அதனால் நீங்கள் காதலில் விழும் போது அதற்காக நீங்கள் அதிகமாகவே உணர்ச்சிவசப்படுவீர்கள். அதை விட்டு மீண்டு வருவது கஷ்டமே. ஆனால் காதல் புரிந்து கஷ்டப்படுவதை விட அதனை விட்டு வெளியேறுவதே புத்திசாலித்தனம். வெளியே வாருங்கள். வேறு எங்காவது சென்று உங்கள் கைப்பேசி எண்ணையும் மாற்றிடுங்கள். அவரை விட்டு விலகியே இருங்கள். உங்கள் காதல் நினைவுகள் உங்களுக்கு மன வருத்தத்தை அளித்தாலும் கூட, அதனை விட்டு வெளியே வந்து விடுங்கள். மற்றவர்கள் சொன்னதற்காக செய்யாமல் உங்களுக்காக நீங்களே இதனை செய்யுங்கள். பல மதிப்பீடுகள் இருந்தாலும் கூட அவைகள் உங்களை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் மதிப்பு சோடை போகவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Share |

Email Visit website

Monday, January 27, 2014

ஆண்களைப் பற்றிய உண்மைகள்!


ஆண்களைப் பற்றிய கேவலமான உண்மைகள்!! எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்... இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.... ஆண் என்பவன் யார்? ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் தாய் தந்தை, சகோதரிக்காக குடும்ப சூழ்நிலையால்,..... பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு வெளிநாடுகளில் வேலை செய்வதன் மூலம் அன்பு மற்றும் சந்தோசத்தை தியாகம் செய்கிறான். அவன் மகள் மற்றும் சகோதரிக்காக தன் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் கடனாளியாய் உருவாகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். அவன் தன் மனைவியின் ஆசைகள் மற்றும் குழந்தைகக்காக படிப்பு, திருமணம் என எந்தவித குறையும் இல்லாமல் வைக்க தன்னையே தியாகம் செய்கிறான். அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர். இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது. பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை. அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள். ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.

Sunday, January 26, 2014

பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாயி




புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த, வெங்கடபதி என்ற விவசாயிக்கு நேற்று பத்மஸ்ரீ விருது டெல்லியில் வழங்கப்பட்டது. தனது 19- வது வயது முதலே விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். தனது முதல் ஆராய்ச்சியில் உருவான கனகாம்பரம் செடியை 1970-ல் அறிமுகம் செய்தார். 100 ரகங்களை அறிமுகம் செய்துள்ளார். சவுக்கு மரத்தில் 100 புதிய ரகங்களைக் கண்டறிந்துள்ளார். மூன்று தலைமுறையாகவே விவசாயத்தில் ஈடுபடும் குடும்பத்தில் பிறந்த வெங்கடபதி, 4- வது வரை மட்டுமே படித்தவர் என்பது குறிப்பிட தக்கது. இப்படிபட்டவர் பத்மஸ்ரீ விருது வாங்கியதை பெருமையாக வெளியில் சொல்ல வேண்டிய அரசங்கமே அவரது தனி புகைப்படத்தை வெளியிடவில்லை. ஊடகங்கள் ஒரு சிலவற்றை தவிர, இந்த செய்தியை யாருமே வெளியிடவில்லை. விவசாயம்தான் மனிதர்களுக்கு உயிர் நாடி. ஆனால், பொழுதுபோக்கு அம்சங்களான சினிமா, இசை, விளையாட்டு போன்றவற்றுக்காக விருது வாங்கியவர்களை எல்லாம் முன்னிலை படுத்துபவர்கள், விவசாயியை மதிக்க தவறிவிட்டனர். பத்மஸ்ரீ விருது வாங்கியவர்களுக்கான பாராட்டு விழாவை புது தில்லி தமிழ்ச் சங்கம் நடத்தியது. அதுகுறித்த விளம்பரம் இரண்டு தினங்களுக்கு முன்பே, தினசரிகளில் வெளிவந்தது. அந்த விளம்பரத்தில் விவசாயி வெங்கடபதியின் பெயர் இடம் பெறவில்லை. 'பசுமை விகடன்' மூலம் தில்லி தமிழ் சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்றோம். ''கட்டாயம் அவரை அழைத்து பாராட்டுகிறோம்'' என்று சொன்னவர்கள், அதன்படியே சிறப்பாக பாராட்டியும் உள்ளார்கள். நடிகையின் தொப்புளை வைத்து பிழைப்பு நடத்திய எந்த வாரஇதழும் இச்செய்தியை வெளியிடவில்லை .. ஒருவேளை தொப்புளைவிட விவசாயம் தரம் தாழ்ந்ததாக நினைத்திருக்கலாம். இதுவே ஒரு சினிமா நட்சத்திரம் வாங்கி இருக்கிறார் என்றால் எத்தனை குடம் பாலாபிசேகம் , வானுயர கட்டவுட்டுகள் , வெடி என ஊரையே அமர்க்களப் படுத்தி இருப்பார்கள் ....

Wednesday, January 22, 2014

காதலிக்க ஒரு ஆணுக்கு முக்கியமாக இருக்கவேண்டிய தகுதிகள்

காதலிக்க ஒரு ஆணுக்கு முக்கியமாக இருக்கவேண்டிய தகுதிகள் .....

நிச்சயமா நல்லவனா நடிக்க தெரியணும் நிறைய பொய் சொல்லணும் 

நண்பர்களுடன் இருக்கும் நேரத்தை இழக்க தயாரா இருக்கணும் 

நிறைய மொக்கை ஜோக்ஸ் தெரியணும் 

பொண்ணுங்க போடுற மொக்கைய தாங்கிக்கிற நல்ல மனசு வேணும் 

பொண்ணுங்க என்னதான் தப்பு பண்ணினாலும் கண்டுக்காத நல்ல மனசும் அவசியம் 

காதலிக்கும் பொண்ணுக்கு பிடிச்ச கலர் ..நடிகர் ..நடிகை .. பாட்டுஎல்லாவற்றையும் உங்களுக்கும் பிடிக்கிறது போல மனச மாத்திக்கணும் 

நைட்டில கண் முழிக்க தயாரா இருக்கணும் .. 

மொபைல்க்கு பில் கட்ட /ரீச்சார்ச் பண்ண லம்பா ஒரு அமவுண்ட்ரெடி பண்ணனும் ... 

அடி வாங்கும் உடல் திறன் மிக அவசியம் (அவளுக்கு அண்ணன் இருந்தா / அப்பா ரவுடியா இருந்தா ) இத்தனையும் நாம பண்ண அவங்க லாஸ்ட்ல டாட்டா காட்டிட்டு இன்னொரு பையனை கலியாணம்பண்ணி போகும் போது "எங்கிருந்தாலும ் வாழ்க " பாட்டு கண்டிப்பா பாடனும் ... 

அந்த மனசுதான் வெரி இம்போர்டேன்ட் ... 

நிச்சயமா ஒரு டைலாக் மனப்பாடம் பண்ணனும் .. 

"திரிஷா இல்லன்னா திவ்யா..போடி போடி

Monday, January 20, 2014

கனவு தேசம் Kanavu Thesam Tamil Facebook Share

கனவு தேசம்
 
சில பேர் கல்யாணத்தக்கு பண்ற செலவுல பாதியைக் கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை....
பணக்கார பங்காளக்களின் பாத்ரூம் பரப்பளவை விட பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது........
சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பல
பெண்களிடம் சேலைகள் இல்லை.....
ராணுவ பட்ஜெட்டின் அளவை விட இங்கு நடக்கும் ஊழல்களின் மதிப்பு அதிகம்.....
சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு பல கோடி மக்களின் ஒரு வருஷ
சம்பளம்...
ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சுபோக
ஒரு காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார்....
சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப் படுகிறார்கள் பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்.....
சட்ட புத்தகத்தில் இருக்கும் நீதிப் பிரிவுகளை விட இங்கு இருக்கும் சாதிப் பிரிவுகள் அதிகம்.....
சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும்,பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்.....
நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில் ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்......
பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன.....
கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும்
கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும்
தேசம்...

Popular Posts