Monday, January 20, 2014

கனவு தேசம் Kanavu Thesam Tamil Facebook Share

கனவு தேசம்
 
சில பேர் கல்யாணத்தக்கு பண்ற செலவுல பாதியைக் கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை....
பணக்கார பங்காளக்களின் பாத்ரூம் பரப்பளவை விட பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது........
சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பல
பெண்களிடம் சேலைகள் இல்லை.....
ராணுவ பட்ஜெட்டின் அளவை விட இங்கு நடக்கும் ஊழல்களின் மதிப்பு அதிகம்.....
சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு பல கோடி மக்களின் ஒரு வருஷ
சம்பளம்...
ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சுபோக
ஒரு காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார்....
சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப் படுகிறார்கள் பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்.....
சட்ட புத்தகத்தில் இருக்கும் நீதிப் பிரிவுகளை விட இங்கு இருக்கும் சாதிப் பிரிவுகள் அதிகம்.....
சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும்,பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்.....
நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில் ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்......
பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன.....
கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும்
கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும்
தேசம்...

1 comment:

Popular Posts