Tuesday, October 8, 2013

Today Medical Tips about Teeth

 Today Medical Tips
 Teeth



இன்றைய பல் மருத்துவ டிப்ஸ்... சாப்பிட்டவுடன் பல் துலக்குவது தவறு. பழங்கள்,குளிர் பாணங்கள்,ஒயின்,அமில தன்மை கொண்ட உணவு வகைகள் சாப்பிட்டவுடன் பல் துலக்கினால் பல் பாதிப்பு அடையும். உணவு பொருள்களில் இருக்கும் அமிலம் பல்லின் எனாமல் பகுதியை சற்று மிருதுவாக மாற்றி இருக்கும் அந்த நேரத்தில் பிரஷ் கொண்டு பல் துலக்கினால் பல்லின் எனாமல் தேயக்கூடும். சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் காத்திருந்தால் நம் வாயில் சுரக்கும் உமிழ் நீர் அந்த அமிலத்தை சமன் செய்து விடும்,அதன் பிறகு நீங்கள் பல் துலக்கினால் பல்லின் எனாமலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து பல் துலக்குவது நன்று. அதே போல் சூடாக தேநீர் அருந்தியவுடன் குளிர்பானம் குடித்தாலும் பல்லின் எனாமலில் விரிசல் ஏற்படும் அதன் மூலம் பல் கூச்சம் உண்டாகும். காலை மாலை இருவேளையும் பல் துலக்குங்கள். @இளையராஜா டென்டிஸ்ட்

No comments:

Post a Comment

Popular Posts