Monday, November 25, 2013

Girls School Uniform குட்டைப் பாவாடை

Girls School Uniform

Tamil Nadu school girls uniform

மாற்றம் வேண்டும்....
*******************

மேற்கத்திய நாடுகளைப் போல, தற்போது இங்கும் பெரும்பாலான பள்ளிகளில் மாணவிகளின் சீருடையாகக் குட்டைப் பாவாடையே இருக்கிறது.

இவ்வாறு குட்டைப் பாவாடை அணிவது - ஆண்களைச் சுண்டி இழுக்கும் வகையிலும், ஆபாசத்தைத் தூண்டும் வகையிலும் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டை எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது.

சிறிய வயதிலேயே வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் கூடிய உடம்புவாகோடு அணிகிற இந்த மாதிரியான உடை, பொது இடங்களில் பலரது கவனத்தையும் சிதறடிக்கிறது என்கிற கருத்தை வீண்வாதம் என்று வெறுத்து ஒதுக்க முனைவது வீம்புக்காக மட்டுமானதாகவே இருக்கமுடியும்.

ஒரு மாணவியின் அப்பா, தனது மகளை அழைத்துப் போவதற்காக தனது ஸ்கூட்டரில் வந்தார். குட்டைப் பாவாடை அணிந்திருந்த அந்த மாணவி அந்த ஸ்கூட்டரின் பின் சீட்டில் ஏறி உட்கார முனையும்போது- அத்தனை விழிகளும் அங்குதான் மொய்த்தன.

இதில் கட்டாயம் மாற்றம் வேண்டும்.

இது பெண்களின் சுதந்திரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற எண்ணமோ அல்ல.

அந்தச் சகோதரிகளின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டே இந்தக் கருத்து,

தமிழகத்தில்....

மாணவியரையும், மாணவர்களையும் பாதிக்கும் வகையிலான உடைகளை ஆசிரியர்கள், ஆசிரியைகள் அணியக் கூடாது. அது பொதுமக்கள் மத்தியிலும் தவறான கருத்துக்களை ஏற்படுத்த வழி வகுத்து விடும் என்று.....

ஆசிரியைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிய தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்குநரகம்.....

இதிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்லது 805_s.jpg

No comments:

Post a Comment

Popular Posts