Thursday, February 13, 2014

சகோதரிகளின் கவனத்திற்கு.....!!

சகோதரிகளின் கவனத்திற்கு.....!! 

அனைவரும் அவசியம் படிக்கவும்....

ஒரு நடுத்தர வயதுப் பெண் கவலையுடன் தனக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் சென்று...

டாக்டர், எனக்கு ஒரு பிரச்னை, அதை தீர்க்க உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன் என்றாள்.

என் கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. அதற்குள் மறுபடியும் கர்ப்பமாயிருக்கிறேன். அடுத்த குழந்தை இப்போது வேண்டாமென்று நினைக்கிறன் என்றாள்.

டாக்டர், அது சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும் ? என்றார்.

அவள், நீங்கள் என் கருவைக் கலைத்து விட வேண்டும், உங்களைத்தான் மலை போல் நம்பியிருக்கிறேன் என்றாள்.

டாக்டர் சற்று நேரம் யோசித்தார். சில நிமிட மௌனத்திற்குப் பின் அந்தப் பெண்ணிடம் சொன்னார். உன் பிரச்னைக்கு என் மனதில் ஒரு நல்ல தீர்வு இருக்கிறது. இதில் உனக்கும் எந்த ஆபத்துமில்லை என்றார்.

தன் வேண்டுதலை டாக்டர் ஒத்துக் கொள்கிறார் என்று அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.

டாக்டர், இதோ பாரம்மா, ஒரே நேரத்தில் உன்னால் இரண்டு குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என்றால், இப்போது உன் கையிலிருக்கும் ஒரு குழந்தையைக் கொன்று விடுவோம். இப்படிச் செய்வதனால், கருவிலிருக்கும் அடுத்த குழந்தை பிறப்பதற்கு முன் நீ நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்றார்.

உன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை, என்ன செய்யலாம் நீயே சொல் என்றார்.

அந்தப் பெண் மிகவும் அரண்டுபோய், வேண்டாம் டாக்டர், வேண்டாம் ! நினைக்கவே பயங்கரம். ஒரு குழந்தையைக் கொல்வது பெருங்குற்றம் என்றாள். 

ஒத்துக் கொள்கிறேன், ஒரு குழந்தையைக் கொல்ல முடிவெடுத்தபின் பிறந்ததைக் கொன்றால் என்ன ? பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன ? இது உனக்குச் சரியாகத் தோன்றினால் இது ஒன்றுதான் ஒரேவழி என்றார்.

அந்தப்பெண் இரண்டு குழந்தையும் வேண்டும் என்று மனம் திருந்தி டாக்டருக்கு நன்றி சொல்லி வீட்டுக்குச் சென்றாள்.

நன்றி : சங்கை ரிதுவான்.

கல்விக் கடன் வாங்கியவர்கள் பெயரை வெளியிடக்கூடாது: வங்கிகளுக்கு அறிவுறுத்தல் Banks asked not to display names of education loan defaulters

Img கல்விக் கடன் வாங்கியவர்கள் பெயரை வெளியிடக்கூடாது: வங்கிகளுக்கு அறிவுறுத்தல் Banks asked not to display names of education loan defaulters

சண்டிகார், பிப்.13-

பஞ்சாபில் உள்ள வங்கிகளிடம் கல்விக்கடன் பெற்று அதை திரும்ப செலுத்த தவறியவர்களின் பெயர்கள் மற்றும் போட்டோக்களை வெளியிடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

நிதியியல் சேவைத்துறை, நிதி அமைச்சகம், மாநில வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டம் நடந்தது. அதில், கல்விக்கடனை திருப்பிச் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் போட்டோக்கள் வெளியிடும் சில வங்கிகளின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது என கூறப்பட்டுள்ளது.

கடன் கட்டாமல் நிற்கும் மாணவர்களின் சூழ்நிலைகளை தெரிந்து கொள்ளாமல், அவர்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் வங்கிகள் இவ்வாறு செய்ல்படுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இனிமேலாவது வங்கிகள் இவ்விஷயத்தில் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும். வங்கிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கல்விக் கடன் கேட்பவர்களின் சொத்துக்களை வருடந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாபில் 2013 டிசம்பர் 31ந் தேதி வரை ரூபாய் 1,065.09 கோடி அளவுக்கு கல்விக் கடன் நிலுவையில் உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
...

மூழ்கிப் போன உண்மைகள்



மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது . நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்". ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!! தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே ! இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே ! முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் ! நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம்ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் ! தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் . நன்றி

Monday, February 10, 2014

பட்டை சோறு உண்பது ஒரு சுகம்

நம் தலைமுறையின் வேகமான வளர்ச்சியில் தொலைந்து போன ஒரு சுகம் ... பட்டை சோறு உண்பது.

எவர்சில்வர் பாத்திரம்கள்.. அதிக புழக்கத்தில் இல்லாத காலம் உணவு உண்ண.. உடனடி பாத்திரமாக இதுவே பயன்பட்டது..

தோட்ட வேலை செய்வோருக்கு.. வீட்டிலிருந்து உணவு கொண்டுவரப்படும்.. பாத்திரம்கள் அதிக எண்ணிகையில்.. இருக்காது..

அப்போது அருகில் நிற்கும் வடலி (இளம் பனை) மரத்திலிருந்து ஓலை வெட்டி.. மட்டையிலிருந்து ஓலையை துண்டுகளாக தேவையான அளவில் வெட்டி.. நடுப்பகுதியை பிரித்து கையால் அழுத்தி .குழி ஏற்படுத்தி.. தும்பு பகுதி.. அதே ஓலையால் கட்டப்படும்.. இன்னொரு சிறுதுண்டு ஓலையை மடக்கி ஸ்பூனாக செய்து பயன்படுத்துவார்கள்.. சுற்றுலா செல்வோரும்.. கூட்டமாக தோட்டங்களில் சமைத்து சாப்பிடுவோரும்.. இதையே பாத்திரமாக பயன்படுத்துவார்கள்

இதில் சாப்பிடும்போது.. ஓலையின் மணமும் இணைந்து ஒரு திகட்டாத புது சுவையை தரும்.. அதிக உணவு சாப்பிடத் தோன்றும்.

Sunday, February 9, 2014

முத்துராமலிங்கதேவர் சிலைக்கு தங்க கவசம்

பசும்பொன் நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு தங்க கவசம் ஜெயலலிதா அணிவித்தார்

தேசிய தலைவர் என்று அழைக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் அக்டோபர் மாதம் கடைசியில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நடைபெற்று வருவது வழக்கம். இதுதவிர அரசியல் கட்சிகள் சார்பிலும் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 2010–ம் ஆண்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பசும்பொன் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பில் தங்க கவசம் அணிவிக்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தார். பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பசும் பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் தங்க கவசம் அணிவிக்கப்படும் என ஜெயலலிதா கடந்த சில தினங்களுக்கு முன்பு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார். அதனை நிறைவேற்றுவதற்காக அவர் இன்று பசும்பொன்வந்தார்.

இதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பகல் 12.35 மணிக்கு மதுரை வந்தார். விமான நிலையத்தில் கலெக்டர் சுப்பிரமணியன், மேயர் ராஜன்செல்லப்பா, போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், மாநகராட்சி கமிஷனர் கிரண்குராலா, போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பகல் 1.30 மணிக்கு பசும்பொன் வந்தார். அங்கு அமைச்சர்கள், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் ஐ.ஜி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

அதன்பிறகு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு வந்தார். அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த தங்க கவசத்திற்கு புனித நீர் ஊற்றினார். அதன்பிறகு ரோஜா மலர்களை தூவினார். அதை தொடர்ந்து தங்க கவசங்களை கோவை காமாட்சிபுரி ஆதீனத்திடம் ஜெயலலிதா வழங்க, அதனை முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அவர் அணிவித்தார். அதன்பின்னர் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு முத்துராமலிங்கத்தேவருக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஹெலிகாப்டரில் மதுரை புறப்பட்ட அவர் அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

முன்னதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி பசும்பொன்னில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, சுந்தரராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

ஜெயலலிதாவை வரவேற்க மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் தொண்டர்கள் பசும் பொன் வந்து குவிந்தனர்.

"வீரம் என்ற குணம் தான் எதிரியும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது."
 

Saturday, February 8, 2014

Dont fall in love

உன்னை புரிந்து கொள்ளாத எதுவும்
உன்னிடம் நிலைப்பதில்லை
உன்னை புரிந்து கொண்ட எதுவும்
உன்னை விட்டு விலகுவதுமில்லை..!!நான் மௌனமாக இருக்க நினைத்தபோதெல்லாம் என்னை பேசவைத்தாய் நான் பேசவேண்டும் என்று நினைக்கும்போதோ என்னை மௌனமாக்கிவிட்டு சென்றுவிட்டாய் .

Friday, February 7, 2014

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா



வேளாண்மை, 

புராதனத் தொழில் - இன்று
புறக்கணிக்கப்பட்ட தொழில்....
காய்ந்து வெடித்த 
வயல் வெளிகளும் - அதனால்
அழுது அழுது
ஓய்ந்து துடித்த
கயல் விழிகளுமாய்
முப்போகம் விளைந்த பூமி - இனி
எப்போது விளையும் என்ற
ஏக்கப் பெருமூச்சுமாய்
உழவர்களின் வாழ்க்கை!
வேளாண்மை செய்பவனை
மேலாண்மை செய்பவன்
மிதிக்கிறான்,
மேலாண்மை செய்பவனை
வேளாண்மை செய்பவன்
துதிக்கிறான்.
பழக்கப்பட்டவரிடம்
சோகத்தைச் சொல்லி அழுவதை
வழக்கமாகக் கொண்டவர் நாம்!
பாவம் உழவன்
மண்ணோடு பாதி நாள்
மாடுகளோடு மீதி நாள்
சோகத்தை யாரிடமாவது
சொல்லி அழலாமென்றால்
உறவென்று யாரும்
ஒட்டுவதில்லை.
உழுது முடித்த சனம்
அழுது முடிக்கும் முன்னே
பொழுது முடிந்துவிடும்
நாளை என்ற நம்பிக்கையில்
நாளைத் தள்ளும் நாடகமே
நடைமுறை!
வேரோடு வேராக
வளரும் பயிருக்குள்
ஒன்றி விடும் உழவர்கள்.....
வயிறு ஒட்டி
சோகம் அப்பி
தேகம் மெலிந்த
இவர்கள் தான் - இந்த
தேசத்தின் வேர்களாம்?
நீர்வீழ்ச்சியை இரசிக்கலாம்
வேருக்கு வீழ்ச்சியென்றால்
எப்படியடா ரசிப்பது?
கார் இல்லையென்றால்
கால்கள் இருக்கின்றன;
விமானம் இல்லையென்றால்
அவமானம் இல்லை.
தானியம் இல்லையென்றால்
சூனியம் தானடா!
இருந்தாலும் இங்கே
கழனிகள் எல்லாம்
மதிப்பிழந்தாச்சு;
கணினிகள் மட்டும்
மதிப்புப் பெற்றாச்சு....
குறுக்கு வலிக்க
உழைத்தக் கூட்டம்
குடிசையை விட்டு உயரவில்லை;
குறுக்கு வழியில் 
பிழைத்தக் கூட்டம்
கோடிகள் சேர்க்க அயரவில்லை.
பெற்ற சம்பளம் போதவில்லை
என்பதோடு மட்டுமே
நின்றுப்போனது
கற்றறிந்தோர் போராட்டம்.
விவசாயக் கூலிகளின் 
வேதனைப் பற்றியும்
விவசாயிகள் வேதனை பற்றியும்
அவரவர் அன்றி
வேறு எவரும்
கவலை கொள்ளார்.
கலப்பைகள்கூடக்
கவலை கொள்ளும் - இவர்
களைப்பறியா உழைப்பு கண்டு!
கள்ளிச் செடியும்
கலவரம் கொள்ளும் - அந்தக்
காய்ந்த நிலப்பரப்பைக்
காண நேர்ந்தால் 
அதிலும்
நம்பிக்கை விதைத்து
கனிகள் விளைவித்து
உயிர் வாழ்வை
உறுதி செய்தோரின்
உயிர் வாழ்க்கை
உத்திரவாதமின்றி
ஊசலாட்டத்தில்.....
கலப்பை மாறி "டிராக்டர்" ஆச்சு
கமலை மாறி "மோட்டார்" ஆச்சு
விதைகள் மாறி "வீரியம்" ஆச்சு
விவசாயிகள் வாழ்க்கை மட்டும்
வீழ்ந்திடல் ஆச்சு
விளைபொருள் கூட
கூர்த் தீட்டிய
கொலைக் கருவியாய்
விவசாய இறக்குமதியில் இன்று?
இத்தனை சோகமும்
பார்த்த பின்னும்
காலம் மறந்து
கண்மூடி வாழ்ந்து
மரித்த பின்
மண்மூடிப் போகவா
வாழ்க்கை?

Popular Posts