Saturday, January 4, 2014

பார்டர் கடை பரோட்டா Border Protta

பார்டர் கடை பரோட்டா: Border Protta

குற்றாலம் என்று சொன்னதும் பல பேருக்கு அருவியைத் தாண்டி ஞாபகத்துக்கு வருவது பார்டர் கடை பரோட்டாவும், நாட்டுக் கோழியும்தான். அங்கு 3 பரோட்டா கடைகள் இருக்கின்றன, மூன்றுமே அதன் தனித்தன்மையான சுவைகளைக் கொண்டிருக்கிறது. பரோட்டாவில் போய் என்ன பெரிய தனித்தன்மையான சுவை என்று நீங்கள் கேட்க்கலாம். ஆனால் இந்த பார்டர் பரோட்டாவில் உள்ளதே… வெண்ணை பரோட்டா போன்று வழுக்கிக்கொண்டு  தொண்டைக்குள் போகிறது. இங்கு கடைக்காரர்களே பரோட்டாவை பிய்த்துப்போட்டு சால்னா (Gravy) என்று சொல்லப்படும் நாட்டுக்கோழி குழம்பை ஊற்றுகிறார் பாருங்கள்.. அட அட அட அப்படி ஒரு சுவை. ஒருமுறை உண்டால் நிச்சயம் இந்த நாட்டுக்கோழி சால்னாவின் சுவைக்கு அடிமையாகிவிடுவோம்.
அட இவ்வளவு தானா என்று கேட்போர்க்கு இங்கே கோழி 65, மிளகு கோழி, கோழி கொத்து (chops) என எல்லாம் நாட்டுக்கோழியில் செய்தவை. அத்தனையும் அதிசுவை மிகுந்துள்ளது. அதுவும் கார விரும்பிகளுக்கு கொண்டாட்டம் தான். காரத்துக்கு முழுக்க முழுக்க பெப்பர் போட்டு பிரட்டி எடுத்து தருகிறார்கள். இவை அனைத்தும் ஒளிவு மறைவுமின்றி நம் கண் முன்னே செய்து தரப்படுவதால் சுத்தமாக செய்யப்படுகிறதாயென்று  நீங்களே பார்த்துக்கொள்ளலாம்

No comments:

Post a Comment

Popular Posts