Sunday, December 29, 2013

Prayers candle vigils mark first death anniv of Dec 16 victim ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டு இறந்த மாணவியின் முதலாண்டு நினைவு தினம்

Img ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டு இறந்த மாணவியின் முதலாண்டு நினைவு தினம்: மெழுகுவர்த்தி ஏந்தி டெல்லியில் அஞ்சலி Prayers candle vigils mark first death anniv of Dec 16 victim

புதுடெல்லி, டிச.28-

டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்த 23 வயது மருத்துவ மாணவி தன் நண்பரான சாப்ட்வேர் என்ஜினீயருடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றார். இரவு 9.30 மணிக்கு வெளியில் வந்த அவர்களுக்கு வீடு திரும்ப ஆட்டோ கிடைக்கவில்லை. அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் அவர்கள் ஏறினார்கள்.
 
பஸ்சில் டிரைவர் ராம்சிங்கும் அவனது கூட்டாளிகள் 5 பேர் இருந்தனர். அவர்கள் மாணவியை கிண்டல் செய்தனர். அதை மாணவியின் நண்பர் தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்குள் கை-கலப்பு, மோதல் ஏற்பட்டது. பஸ்சில் இருந்த பழைய இரும்பு கம்பிகளை எடுத்து சாப்ட்வேர் என்ஜினீயரை சரமாரியாக தாக்கினார்கள். இதை மாணவி தடுத்தார். மது போதையில் இருந்த அந்த வாலிபர்கள் கண் மூடித்தனமாக இருவரையும் தாக்கினார்கள். தலையில் அடிபட்ட சாப்ட்வேர் என்ஜினீயர் மயங்கி விழுந்தார்.
 
இதையடுத்து மாணவி அவர்களை கடுமையாக திட்டினார். பஸ்சை நிறுத்தும்படி கூச்சலிட்டார். இதனால் கோபம் அடைந்த வாலிபர்கள், மாணவியை மீண்டும் இரும்பு கம்பியால் தாக்கினார்கள். ஒருவன் மாணவி வயிற்றில் கம்பியால் குத்தினான். இதில் மாணவி சுருண்டு விழுந்தார். போதையில் இருந்த வாலிபர்கள் ஈவு இரக்கமின்றி மாணவியை கற்பழித்தனர்.
 
சுமார் 30 நிமிடம் அந்த பஸ் டெல்லி சாலையில் ஓடிய நிலையில், மாணவி சின்னா பின்னமாக்கப்பட்டார். காம இச்சையை தீர்த்துக் கொண்ட 6 பேரும் 10.35 மணியளவில் ஓடும் பஸ்சில் இருந்து மாணவியையும், அவரது நண்பரையும் சாலையோரத்தில் தள்ளிவிட்டு சென்றனர்.
 
சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை, அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மாணவியையும், அவரது நண்பரையும் மீட்டு டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
 
டெல்லி மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் மறுநாள் காலை பரபரப்புடன் இணையத்தளங்களில் வெளியானது. மாணவிக்கு மயக்க நிலையில் செயற்கை சுவாசத்துடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவியின் நண்பர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதன் மூலம் குற்றவாளிகள் பற்றிய விவரம் தெரிய வந்தது. டெல்லி போலீசார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடினார்கள்.

சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவியின் உடல்நிலை மிக, மிக கவலைக்கிடமாக மாறியது. துருபிடித்த இரும்பு கம்பியால் தாக்கியதில் மாணவி குடல் கிழிந்து அழுகி விட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் டாக்டர்கள் மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்து மாணவி சிறுகுடலை அகற்றினார்கள். அன்றே அடுத்தடுத்து மேலும் 2 ஆபரேஷன்கள் செய்யப்பட்டன.

இதற்கிடையே, சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர்கள் கொடுத்த சிகிச்சையால் மாணவி மயக்கம் தெளிந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட செயற்கை சுவாசம் விலக்கப்பட்டது. அவரிடம் டெல்லி மாஜிஸ்திரேட் மரணவாக்குமூலம் வாங்கினார்.
 
அப்போது அந்த மருத்துவ மாணவி, நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன். எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள். குற்றவாளிகளை தப்பவிட்டு விடாதீர்கள் என்றார்.

டிசம்பர் 25-ம் தேதி அவரது நுரையீரலில் கிருமி தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மேலும் 2 ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. 26-ம் தேதி மருத்துவ மாணவி உடல் நிலை மிகவும் மோசமானது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரி டாக்டர்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு ஆலோசித்தனர். அதன்பிறகு மாணவியை சிங்கப்பூர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. மாணவி பெற்றோர், சகோதரர்களுக்கு மத்திய அரசு உடனடியாக பாஸ்போர்ட், விசா வழங்கியது.
 
26-ம் தேதி இரவு சிறப்பு ஏர்- ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மாணவி டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்துக்கு மட்டும் கட்டணமாக 60 லட்சம் ரூபாயை மத்திய அரசு வழங்கியது. மாணவியுடன் 2 டெல்லி டாக்டர்களும் சிங்கப்பூர் சென்றனர். சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ராகவன் தலைமையில் அதிகாரிகள் குழு மாணவி சிகிச்சைக்கான எல்லா உதவிகளையும் செய்தது.
 
டிசம்பர் 27-ம் தேதி அதிகாலை சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மாணவி சேர்க்கப்பட்டார். உடனடியாக அவருக்கு நவீன சி.டி.ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அப்போது மாணவி தலைமையில் காயம் ஏற்பட்டு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். மாணவி உடல்நிலை மிக, மிக மோசமாக இருப்பதாக சிங்கப்பூர் டாக்டர்கள் அறிவித்தனர்.
 
டிசம்பர் 28-ம் தேதியன்று மாணவி கொண்டு வரப்படும் போது மாரடைப்பு ஏற்பட்ட தகவல் வெளியானது. மாணவி உடல் உள்உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல்இழக்க தொடங்கின. மாணவி குடல், நுரையீரலில் கிருமி தொற்றுக்கள் அதிகம் ஏற்பட்டது. மாணவி உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமாக போராடினார்கள்.
 
இருப்பினும், சிகிச்சை பலனின்றி 29-ம் தேதி அதிகாலை 2.15 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.

அவர் இறந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள மாணவியின் சொந்த கிராமத்தில் அவரது பெற்றோர், உறவினர், ஊர் மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கையில் தீபங்களை ஏந்தியபடி, அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்தனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதேபோல், தலைநகர் டெல்லியிலும் ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான பெண்களும், பொது மக்களும் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மவுனமாக நின்று நினைவஞ்சலி செலுத்தினர்.
...

Wednesday, December 25, 2013

இந்தோனேசிய குகையில் புதைந்து கிடக்கும் சுனாமி ரகசியம் Indonesias massive earthquake spawned tsunami

Img இந்தோனேசிய குகையில் புதைந்து கிடக்கும் சுனாமி ரகசியம்: நெஞ்சை அதிரவைக்கும் தகவல் Indonesias massive earthquake spawned tsunami

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு முனையில் 2004 ஆம் ஆண்டு 26-ம் தேதி ஏற்பட்ட 9.1 அதிர்வெண் கொண்ட பூகம்பத்தால் 100 அடி உயரத்திற்கு எழுந்த சுனாமி அலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக மக்கள் மறந்துவிட முடியாது. இந்த சுனாமியின் சீற்றத்தால் பல நாடுகளை சேர்ந்த 2,30,000 மக்கள் செத்து மடிந்தனர். இதில் பாதி பேர்  இந்தோனேசியாவைச் சார்ந்தவர்கள்.

அந்த சோகச்சுவடுகள் ஏற்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் இங்குள்ள ஏசஹ் மாகாணத்தின் சுமத்ரா தீவின் ஒரு பகுதியில் குகை ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குகையை ஆராய்ச்சி செய்தபோது, 7500 ஆண்டுகளுக்கு முன் சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பாண்டா ஏசஹ் கடற்கரை அருகே உள்ள 3 மீட்டர் ஆழம் கொண்ட இச்சுண்ணாம்பு குகை புயலால் பாதிக்கப்படாதவாறு பாதுகாப்பாக உள்ளது. பேரலைகள் மட்டுமே இக்குகைக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது.

1000 ஆண்டுகளுக்கு முன் உள்ள மணற் படிவங்களை, மட்டைகளை அடுக்கி வைத்தது போன்று கேக் வடிவில் இக்குகை காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குகையிலுள்ள மணற்படிவங்கள், சிப்பி ஓடுகள், எஞ்சியுள்ள நுண்ணிய உயிரினங்களின் மாதிரியை சேகரித்து கதிரியக்கக் கரிம ஆய்வு செய்ததில், 2004க்கு முன் 11 சுனாமி ஏற்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2800 ஆண்டுகளுக்கு முன் பேரழிவு ஏற்படுத்திய சுனாமி தாக்கியதாகவும், சென்ற 500 ஆண்டுகளில் 4 சுனாமிகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். 1393 மற்றும் 1450 ஆம் ஆண்டுகளில் மிகப்பெரிய அசுர பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் உறுதியாக கூறியுள்ளனர். எவ்வளவு உயரமான சுனாமி அலைகள் குகையை தாக்கியுள்ளன என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பல நூற்றாண்டுகளாக சுனாமியின் தாக்கம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருப்பதால், கோடிக்கணக்கான மக்கள்  பலியாகியிருக்கலாம் என்ற யூகங்களுக்கு இடம் உள்ளது.

இந்த ஆய்வு பற்றி ஆராய்ச்சியாளர் ரூபின் கூறும்போது, "2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டதால் இன்னும் 500 வருடங்களுக்கு சுனாமி வர வாய்ப்பில்லை என உறுதியாக கூற முடியாது, உடனடியாக பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறமுடியாது" என்றார்.

500 வருடங்களுக்கு முன் சுனாமி ஏற்பட்டதை உணர்ந்தவர்கள் யாரும் இல்லாததால் 2004 ஆம் ஆண்டு பேரிழப்பை சந்திக்க நேர்ந்ததாகவும், ஆனால் 2004-க்குப் பிறகு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் சுனாமி ஏற்படப்போகும் வாய்ப்பை முன்னதாக அறிந்து கொள்ள முடியும், என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கதிரியக்கக்கரிம ஆய்வு செய்ததில் எவ்வளவு அதிர்வெண் கொண்ட பூகம்பங்கள் இதற்கு முன் ஏற்பட்டது என்பதை அறிய முடிந்ததென்றும், ஆனால் சுனாமியின் அளவை அறியமுடியவில்லை என்றும் மற்றொரு ஆராய்ச்சியாளர் கேத்ரின் மொனெக்கெ தெரிவித்துள்ளார்.

இவ்வாராய்ச்சியில் ஈடுபட்ட சிங்கப்பூர் குரூப் என்ற ஆராய்ச்சி குழுமத்தின் தலைவரான புவியியல் வல்லுனர் கெர்ரி சீஹ் கூறுகையில், "இன்னும் பல பத்தாண்டுகளில் அசுர பலம் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் எப்போது பூகம்பம்  ஏற்படும் என்பதை உறுதியாக கூறமுடியாது. அதே சமயத்தில் சுனாமியால் பாதிப்பு ஏற்படாத வகையில் நாம் நடவடிக்கை எடுத்துக்கொள்ள நல்ல வாய்ப்புள்ளது" என்றார்.

...

Tanjavur Temple தஞ்சை பெரிய கோயில்

ஒரு தமிழ் மன்னனின் பெருமை தமிழகத்துக்கு பெருமை:

"தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன் மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக் கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது" .

via சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா

Tuesday, December 24, 2013

சுனாமி 9 ம் ஆண்டு நினைவு தினம் Tsunami 9th anniversary tomorrow

Img சுனாமி பேரலைக்கு ஆருயிர்களை பறிகொடுத்த 9 ம் ஆண்டு நினைவு தினம் Tsunami 9th anniversary tomorrow

சென்னை, டிச.25-

சுனாமி எனப்படும் ஆழிப்பேரலையின் ருத்ரதாண்டவத்தால் ஏராளமான உயிர்களை கடல் விழுங்கிய 9-ம் ஆண்டு நினைவு தினம், நாளை (வியாழக்கிழமை) தமிழக கடற்கரைகளில் மறக்க முடியாத துயர நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகிறது. இது ஆவேசமாக கரையை தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் திடீரென ஏற்பட்ட பூகம்பத்தால் நம் நாட்டில் ஆந்திரா, புதுச்சேரி மற்றும் நம் தமிழகத்தின் சென்னை, நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல கடலோர மாவட்டங்களில் ஒரு பனைமரம் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி கடற்கரை பகுதியை தாக்கின.

சுனாமியின் கோரதாண்டம் 6 ஆயிரத்திற்கு மேலான மனித உயிர்களை பறித்துக்கொண்டதுடன், கோடிக்கணக்கான மதிப்பிலான மீனவர்களின் உடைமைகளும் சேதமடைந்தன.

சுனாமி தாக்குதல் நடந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்டன. தலைமுறை தாண்டியும் இந்த சோகச்சுவடுகள் என்றும் மறையாது. நீங்காத நினைவுகளோடும் நீர்வழியும் விழிகளோடும் கனத்த இதயத்தோடும் பறிகொடுத்த தங்கள் உதிர உறவுகளை நினைத்து வேளாங்கண்ணி போன்ற ஒரு சில இடங்களில் உள்ள நினைவுச்சின்னங்களில் மக்கள் ஆண்டுதோறும் சுனாமி நினைவு தினமாக டிசம்பர் 26-ந்தேதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் இன்று 9-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி, கடலூர், வேளாங்கண்ணி கடற்கரை பகுதிகளிலும் மற்றும் சென்னையில் மெரினா கடற்கரை, காசிமேடு கடற்கரை, பட்டினப்பாக்கம், அயோத்தியா நகர், காஞ்சீபுரம் மாவட்டம் சதுரங்கப்பட்டினம் மற்றும் கல்பாக்கம் பகுதிகளில் பலர் கடலுக்கு மெழுகுவர்த்தி மற்றும் அகல்விளக்கு ஏந்தி சென்று பால் ஊற்றி, மலர் தூவி சுனாமியில் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

மீனவர்களும் தங்கள் பங்குக்கு மீன்பிடிக்க செல்லாமல் கடல் அன்னைக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

இனியும் சுனாமிக்கு இந்திய மனித உயிர்களை பலியிட நாம் தயாராக இல்லை. எனவே நம் கடல் பகுதிகளில் அதிகளவு சுனாமி மிதவை கருவியை அமைத்து வரும் காலத்திலாவது சுனாமியிலிருந்து மனித உயிர்களையும், சொத்துக்களையும் காக்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
...

Sunday, December 22, 2013

இந்திய வீரர்களின் துணிச்சலால் அதிக உயிர் இழப்பு தவிர்ப்பு Indian soldiers life bravery loss avoidance UN Congratulation

இந்திய வீரர்களின் துணிச்சலால் அதிக உயிர் இழப்பு தவிர்ப்பு: ஐ.நா. பாராட்டு Indian soldiers life bravery loss avoidance UN Congratulation

நியூயார்க், டிச.23-

தெற்கு சூடானில் அமைதிப்படை முகாம் மீது நடைபெற்ற தாக்குதலின் போது இந்திய வீரர்களின் துணிச்சல்மிக்க செயல்களால் பெரிய உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது என ஐ.நா.சபை அதிகாரி பாராட்டினார்.

ஆப்பிரிக்காவில் உள்ள தெற்கு சூடானின் அதிபரின் ராணுவத்துக்கும், துணை அதிபரின் புரட்சிப்படைக்கும் இடையே கடும் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதில் 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் அப்பாவி பொதுமக்கள் தஞ்சம் தேடி ஓடுகிறார்கள். இவர்களுக்கு அடைக்கலம் அளிக்க ஐ.நா.சபையின் கீழ் செயல்படும் அமைதிப்படையினர் 6 இடங்களில் முகாம் அமைத்து பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். இந்த அமைதிப்படையில் இந்திய ராணுவ வீரர்கள் கணிசமான அளவில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இதுபோன்று அகோபோ நகரில் அமைக்கப்பட்ட முகாமில் 43 இந்திய வீரர்கள் உள்ளனர். இந்த முகாம் மீது கடந்த 19-ந்தேதி புரட்சிப்படையை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அதில் 2 இந்திய வீரர்கள் உள்பட 22 பேர் உயிர் இழந்தனர். மேலும் ஒரு இந்திய வீரர் படுகாயம் அடைந்தார்.

உயிர் தியாகம் செய்த 2 இந்தியர்கள் வாரண்டு அதிகாரிகள் தர்மேஷ் சங்வான், குமார் பால் சிங் ஆவார்கள். காயம் அடைந்தவரின் பெயர் மோன்தால் ஷாபுல். இவரது மார்பில் குண்டு பாய்ந்துள்ளது. தற்போது அவர் மலாகால் என்ற இடத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவருடைய உடல்நிலை சீராக இருக்கிறது.

உயிர் இழந்த 2 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் இரங்கல் கூட்டம் தலைநகர் ஜூபாவில் உள்ள ஐ.நா.சபை அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஐ.நா. பொதுச்செயலாளரின் சிறப்பு பிரதிநிதி (தெற்கு சூடான்) ல்டே ஜான்சன் கலந்து கொண்டு 2 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பிறகு இவர்களின் உயிர் தியாகத்தை அவர் புகழ்ந்து பேசினார். குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த அமைதிப்படை முகாமில் பணியில் இருந்த 43 இந்தியர்களும் துணிச்சலுடன் செயல்பட்டார்கள். இதனாலேயே பெரிய உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் இந்த அர்ப்பணிப்பு மிகுந்த பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், 'தெற்கு சூடானில் எங்கள் பணி தொடரும். அதற்கு அச்சுறுதல்கள் வந்தால் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற தெற்கு சூடான் வெளியுறவு மந்திரி பர்னபா மரில் பெஞ்சமின் பேசுகையில், 'இந்த தாக்குதலை நடத்தியவர்களை பிடித்து நீதியின் முன் நிறுத்துவோம்' என்றார்.

இதற்கிடையில் அமெரிக்க போர் விமானங்கள் மீது புரட்சியாளர்கள் சுட்டதில் 4 வீரர்கள் காயம் அடைந்தனர். அங்கு வசிக்கும் அமெரிக்கர்களை மீட்க சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்றது.

இந்த விவகாரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் மற்றும் அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஒபாமா அவசர ஆலோசனை நடத்தினார்.

தெற்கு சூடானில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு தலைவர்கள் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
...

Saturday, December 21, 2013

Indian goverment status அன்றே அம்மணமான இந்திய ஒன்றியம்!

Indian goverment status

அன்றே அம்மணமான இந்திய ஒன்றியம்!

இந்தியாவின் முதல் குடிமகன்,முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களை அமெரிக்க வானூர்தி நிலையத்தில் ஆடை பரிசோதனை செய்த செய்தி ஊடங்களில் வந்த போது இது போல் இந்திய ஒன்றியம் கொதிக்கவில்லையே ஏன்? அன்று அவமானப்படுத்தப்பட்டவர் தமிழர் என்பதாலா?

அமெரிக்க தூதரக அதிகாரி என்ற உயர் பதவியில் இருந்து கொண்டு ஏழை இந்தியப் பெண்ணிற்கு ஊதியம் கொடுக்காமல் கொடுமைப் படுத்தி, அமெரிக்க விசா பெறுவதற்காக தவறான தகவல் களை அளித்து அமெரிக்க நாட்டையே ஏமாற்றி இருக்கிறார் என்ற அடிப்படையில் தேவயானி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு ள்ளார்.அவருக்காக இந்திய ஒன்றியம் மல்லுக் கட்டி நிற்கிறது .பரிந்து பேசுகிறது.

இந்தியருக்கு, இந்திய ஒன்றியத்திற்கு நேர்ந்த அவமானமாக நடுவண் அரசு இதை குறிப்பிடுகிறது

தவறு செய்த தேவயானியை பணியிலிருந்து நீக்கி இந்தியாவிற்கு திருப்பி அழைத்து தண்டனையை வழங்க வேண்டிய இந்தியா மாறாக பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணையும் அவரது குடும்பத்தையும் குற்றவாளிகளாக்கி உள்ளது . அந்த ஏழைப் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை யைப் பற்றி, அவரும் இந்தியர் தானே என்பதைப் பற்றி இந்தியா கவலைப் படவில்லை.

தான் கைது செய்யப்படலாம் என்று முன்பே அறிந்திருந்த தேவயானி தில்லி உயர்நீதிமன்ற த்தில் தடை பெற்றிருக்கிறார் என்றால், அவர் தெரிந்தே செய்திருக்கும் தவறு என்பதை இந்திய ஒன்றியம் உணர்ந்திருந்த போதும் உடனடியாக எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. .

இது ஒரு விரும்பத்தகாத செயல் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
.
டில்லி வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினருடனான சந்திப்பை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, நரேந்திர மோடி, ராகுல் காந்தி, நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் ரத்து செய்து விட்டனர்.

இந்தியாவிலுள்ள அனைத்து அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள சில அடையாள அட்டைகளை திருப்பியளிக்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் உணவு மற்றும் மதுபானம் உட்பட அனைத்து வகையான பொருட் களை இறக்குமதி செய்யும் சலுகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

டில்லி அமெரிக்கத் தூதரகத்தின் முன்னுள்ள பாதுகாப்பு அரண்கள், தூதரக வாயிலில் பாதுகாப்பு தற்காப்புத் தடைகள் விலக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அமெரிக்கப் பள்ளிகளில் பணிபுரிவோரின் வருமானம், வங்கி கணக்குகள், வருமான வரி தகவல்கள் மற்றும் விசா தகவல்களை மத்திய அரசிடம் அளிக்கக் கோரப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் என்று இந்திய சட்ட அமைப்பு சொல்கிறது .அவர் அவமானப்படுத்தப்படும் பொழுது இதுப் போன்ற நடவடிக்கைகளை இந்திய ஒன்றியம் ஏன் எடுக்க வில்லை ?அவர் தமிழர் என்ற ஒரே கரணிய த்திற்காக அன்று வெறும் அறிக்கையோடு அமைதியாக இருந்தது.

இன்று தேவயானிக்கான சட்ட பாதுகாப்பை அதிகரிக்க இந்தியா அவரை ஐநா மன்ற இந்திய தூதரகப் அதிகாரியாக நியமித்திருப்பது இந்திய "நீதி" யை உலகில் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இனியாவது புரிந்துக் கொள்ளுங்கள் தமிழர்களே. நீங்கள் முதலில் தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று

Thursday, December 19, 2013

Kamarajar duty கர்ம வீரரின் கடமை

Political leader kamarjar news

Kamarajar duty கர்ம வீரரின் கடமை

நம்ம கடமையைத்தானேய்யா நாம செஞ்சோம்?

1967 தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவ, திமுக அறியணை ஏறியது. அப்போது ஒரு காங்கிரஸ்காரர் காமராஜரிடம் சொன்னார், "மக்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்திருக்கிறீர்கள். அப்படியும் நீங்கள் ஜெயிப்பதற்குத் தேவையான வாக்குகள் விழவில்லை. என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தீர்களா? எதிர்க்கட்சிக்காரர்கள் ஓயாத பிரசாரத்தின் மூலம் நம்மை வீழ்த்திவிட்டார்கள். நீங்களோ நாம் மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் செய்தோம் என்பதைக் கூடப் பிரசாரத்தில் விவரமாய்த் தெரிவிக்கவே இல்லை. நீங்கள் தோற்றதற்கு அதுதான் காரணம்!" அதற்கு காமராஜர் சொன்ன பதில், "அட, போய்யா! பெத்த தாய்க்குச் சேலை வாங்கிக் குடுக்கிற மகன், 'எங்கம்மாவுக்கு நான் சேலை வாங்கிக் குடுத்தேன், எங்கம்மாவுக்குச் சேலை வாங்கிக்க குடுத்தேன்னு தம்பட்டம் அடிக்கலாமான்னேன்! நம்ம கடமையைத்தானேய்யா நாம செஞ்சோம்? அதில பீத்திக்கிறதுக்கு என்ன இருக்குன்னேன்?"
Kamarajar duty கர்ம வீரரின் கடமை

இந்திய பெண் தூதர் கைது விவகாரத்தில் நடந்தது என்ன? US explained what happened in the case of an Indian woman diplomat arrested

இந்திய பெண் தூதர் கைது விவகாரத்தில் நடந்தது என்ன?: அமெரிக்கா விளக்கம் US explained what happened in the case of an Indian woman diplomat arrested

நியூயார்க், டிச.20-

நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணைத்தூதராக பணியாற்றிவந்த டாக்டர் தேவயானி கோப்ரகடே, கடந்த 12-ந்தேதி விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்பேரில் கைது செய்யப்பட்டு, நடத்தப்பட்டவிதம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவலை மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங் நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் இந்திய பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் சலுகைகளை பறிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவயானிக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கிறவகையில் அவரை ஐ.நா. சபைக்கான நிரந்தர இந்தியத்தூதராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தேவயானி, இந்தியாவில் இருந்து வீட்டு வேலை செய்வதற்காக அழைத்துச்சென்ற பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டுக்கு அமெரிக்க சட்ட விதிகள்படி மணிக்கு 9.75 டாலர் (சுமார் ரூ.620) தருவதாக அழைத்துச்சென்றதாகவும், ஆனால் மணிக்கு 3.11 டாலர் மட்டுமே (சுமார் ரூ.186) சம்பளம் தந்ததாகவும், தினமும் 19 மணி நேரம் வலுக்கட்டாயமாக வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாகவும், இதற்கு உடன்படாத நிலையில் அந்தப்பெண், தேவயானியின் வீட்டில் இருந்து சென்று விட்டதாகவும் தெரியவந்தது. அவர் என்ன ஆனார் என்பதில் சஸ்பென்ஸ் நீடித்து வந்தது.

ஆனால் தேவயானியின் குடும்பத்தினர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டு, அமெரிக்காவில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இப்போது தெரிய வந்துள்ளது. தேவயானி மீது அமெரிக்க அரசு சட்ட நடவடிக்கைகள் எடுக்கத்தொடங்கிய நிலையில் சங்கீதா ரிச்சர்டு குடும்பத்தினரை அமைதிப்படுத்த இந்தியத்தரப்பில் முயற்சிகள் நடந்ததாகவும், அவரை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அழைத்துவர வலுக்கட்டாயமாக முயற்சி நடந்ததாகவும் அமெரிக்க அரசு வக்கீல் பிரித் பராரா தெரிவித்துள்ளார். (இவரும் இந்தியர்தான்).

அவர், தேவயானி நடத்தப்பட்டவிதம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றி, விரிவான விளக்கம் அளித்து 3 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

தேவயானி கைது செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில் வெளியான தவறான தகவல்கள் குறித்து, நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தூதர்கள், தூதரக அதிகாரிகளின் வேலைக்காரர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்க சட்டங்களை தேவயானி பின்பற்ற தவறி உள்ளார்.

தேவயானி அவரது குழந்தைகள் முன்னிலையில் கைது செய்யப்பட்டதாக தவறாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை மற்றவர்களைப்போல அல்லாமல், முடிந்த அளவு மிகுந்த முன் எச்சரிக்கை உணர்வுடன் கைது செய்துள்ளனர். அவருக்கு அப்போது கை விலங்கிடப்படவில்லை. கட்டுக்குள் வைக்கப்பட்டு விடவும் இல்லை.

உண்மையைச் சொல்வதானால், கைது செய்த அதிகாரிகள் வழக்கமாக மற்றவர்களிடம் இருந்து செல்போனை பறித்து விடுவதைக்கூட செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் எண்ணற்ற தொலைபேசி அழைப்புகளை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. குழந்தைகளை கவனித்துக்கொள்ள அவர் யாரையெல்லாம் தொடர்பு கொள்ள விரும்பினாரோ அதற்கெல்லாம் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

தேவயானி கைது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் ஏறத்தாழ 2 மணி நேரத்தில் முடிந்து விட்டது.

கடும் குளிர் காரணமாக அவரை தங்களது காரில் வைத்து போன் செய்யவும் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். அவருக்கு காபி கூட வரவழைத்து கொடுக்கப்பட்டது. அவருக்கு உணவு தரவும் முன்வந்தனர்.

அவர் போலீசாரின் காவலுக்கு ஒப்படைக்கப்பட்டபோது, ஒரு பெண் போலீஸ் அதிகாரியை கொண்டு அந்தரங்கமாக முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இது ஒவ்வொரு வழக்கிலும் குற்றம் சாட்டப்படுகிறவர்களுக்கு வழக்கமாக மேற்கொள்கிற சோதனைதான். அவர் பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், அமெரிக்கராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் அவர்கள் யாரையும் பாதிப்புக்குள்ளாகிவிடும் விதத்தில் அல்லது தன்னைத்தானே எதுவும் செய்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் எதையும் வைத்துக்கொண்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்கு இந்த சோதனை செய்யப்படுகிறது.

கொழுந்து விட்டு எரியச்செய்கிற சூழலை உருவாக்கும் அளவுக்கு தேவயானி விவகாரத்தில் தவறான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதை சரிசெய்ய வேண்டியது முக்கியமாகி உள்ளது. ஏனெனில் அவை மக்களை தவறாக வழி நடத்திவிடும்.

தேவயானி, சட்டத்திலிருந்து தப்பிக்க முயற்சித்ததோடு மட்டுமல்லாமல், அவர் பொய்யான ஆவணங்களை அளித்துள்ளார். அவர் பொய்யான தகவல்களையும் அமெரிக்க அரசிடம் அளித்துள்ளார்.

எந்த அரசாங்கமாவது, தனது நாட்டுக்குள் ஒருவரை அழைத்துக்கொண்டு வருவதற்கு ஒருவர் பொய்யான தகவல்களை அளித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுமா?

சட்டத்தை மீறுகிற வகையில், பணிப்பெண்ணை சரிவர நடத்தாமல் இருந்தால் எந்த அரசாங்கமாவது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுமா?

இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இந்திய பிரஜை நடத்தப்பட்டவிதம் குறித்து வரம்பு கடந்து நடந்துகொள்கிறார்களே, ஆனால் இந்திய பணிப்பெண்ணோ, அவரது கணவரோ மோசமாக நடத்தப்பட்டது குறித்து கொஞ்சமாவது கொந்தளித்தார்களா?

எங்கள் அலுவலகத்தை பொறுத்தமட்டில் அது, வழக்கினை நடத்துகிற அலுவலகத்தின் பொறுப்பை கொண்டுள்ளது. கைது செய்தல், காவலில் வைத்தல் தொடர்பானது அல்ல. எனவே அவர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்த தகவல்களை தொடர்புடைய அமைப்புகளிடம்தான் கேட்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் தேவயானி நடந்துகொண்ட விதம், நியாயம் என கூறுகிற வகையில் இல்லை என்பது தெளிவு.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டு தனது பாஸ்போர்ட்டு, விசாவை எங்கும் பணி செய்கிற வகையில் மாற்றிக்கொள்ள மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், தேவயானியிடமிருந்து ரொக்கப்பணம், செல்போன், ஆவணங்கள் திருடிய குற்றச்சாட்டுக்களுக்காக ரிச்சர்டை கைது செய்ய அமெரிக்க அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள தேவயானியை, நியூயார்க் துணை தூதரகத்தில் இருந்து விடுவிக்க எந்த ஒரு வேண்டுகோளும் வரவில்லை என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹார்ப் கூறினார்.
...
 

Wednesday, December 18, 2013

கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு Lifetime Achievement Award to Kapildev Indian Cricket Board Announced

Img கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு Lifetime Achievement Award to Kapildev Indian Cricket Board Announced

புதுடெல்லி, டிச.19-

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 1994-ம் ஆண்டில் இருந்து வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை முதல்முறையாக லாலா அமர்நாத் பெற்றார். கடைசியாக 2012-ம் ஆண்டில் சுனில் கவாஸ்கர் வாங்கினார். 2004-ம் ஆண்டில் மட்டும் ஒரே நேரத்தில் 4 பேர் கவுரவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 2012-13-ம் ஆண்டுக்கான விருதுக்குரியவரை தேர்வு செய்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன், செயலாளர் சஞ்சய் பட்டேல், மூத்த பத்திரிகையாளர் அயாஸ் மெமோன் ஆகியோர் கொண்ட கமிட்டி சென்னையில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தியது. இதில் இந்திய ஆல்-ரவுண்டர் ஜாம்பவான் கபில்தேவுக்கு இந்த முறை வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை அளிப்பது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த விருதை பெறும் 21-வது வீரர் கபில்தேவ் ஆவார். அவருக்கு விருதுடன் ரூ.25 லட்சமும் வழங்கப்படும். விருது வழங்கும் தேதி விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

54 வயதான கபில்தேவ் 1983-ம் ஆண்டு இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று தந்த கேப்டன் என்ற பெருமைக்குரியவர் ஆவார். 225 ஒரு நாள் போட்டிகளிலும், 131 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். டெஸ்டில் 5 ஆயிரம் ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகள் இவை இரண்டையும் சேர்த்து எடுத்த முதல் வீரர் என்ற சிறப்பும் கபில்தேவுக்கு உண்டு.

2007-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.) அமைப்பில் கபில்தேவ் சேர்ந்து அதன் தலைவரானார். இதனால் அவருக்கும் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து தேசிய கிரிக்கெட் அகாடமியின் சேர்மன் பதவி பறிக்கப்பட்டது.

பிறகு 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் ஐ.சி.எல். அமைப்பின் இருந்து விலகிய பிறகு, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கரிசனம் கிடைக்கத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இப்போது கவுரவமிக்க இந்த விருதுக்கு தேர்வாகி உள்ளார்.
...

Saturday, December 14, 2013

Kalpana chawla கல்பனா

Kalpana chawla கல்பனா

வின்வெளி வீரப் பெண்மணி :

கல்பனா தன்
கிராமத்து தெருக்களில்
நின்றுகொண்டு ஆகாயத்தை
பார்த்து வியப்பார். ஆகாயத்தில்
அமைதியை கிழித்துக்கொண்டு
போகும் விமானங்களின்
பாதையை இமைகொட்டாமல்
பார்த்துகொண்டு இருப்பார்.

தன்
சகோதரனின் மோட்டார்
சைக்கிளில்
பின் இருக்கையில்
அமர்ந்து பயணிக்கும்
போதெல்லாம்
அவரது பார்வை ஆகாயத்தை
நோக்கிதான் உயரும். கர்னாவில்
உள்ள தாஹூர் பள்ளியில் ஆரம்ப
கல்வியை முடித்த
கல்பனா சண்டிகாரில் பஞ்சாப்
பொறியியல் கல்லூரியில்
விமான பொறியியல் பயில
விரும்பினார். அந்த துறையில்
பயின்ற மற்ற அனைவரும்
ஆண்களாக இருந்ததால் முதலில்
பெற்றோர்கள் மறுத்தனர்.

ஆனால் கல்பனாவின்
எண்ணத்தை அவர்களால் மாற்ற
முடியவில்லை. அந்த
கல்லூரியில் 1982 ல்
இளங்கலை பட்டம் பெற்றார்.
ஆகாயத்தைப்
பற்றியே கனவு கண்டு
கொண்டிருந்த
அவரை அமெரிக்கா வரவேற்றது.

1984 ஆம் ஆண்டு டெக்ஸஸ்
பல்கலைகழகத்தில்
விண்வெளி பொறியியல்
துறையில் முதுகலைப் பட்டம்
பெற்றார். நான்கு ஆண்டுகள்
கழித்து கொலோராடோ பல்கலை
கழகத்தில் அதே பொறியியல்
துறையில் முனைவர் பட்டம்
பெற்றார். முனைவர் பட்டம் பெற்ற
உடனேயே நாசா எனப்படும்
அமெரிக்க
விண்வெளி ஆய்வு நிலையத்தில்
சேர்ந்தார். எளிய மொழியில்
விளக்குவதற்கு சிரமமான சில
ஆராய்ட்சிகளில் ஈடுபட்டார்.

1993 ல் கல்பனா ஒரு தனியார்
நிறுவனத்தில்
ஆய்வு விஞ்ஞானியாக
சேர்ந்தார். அதற்கு அடுத்த
ஆண்டே கல்பனாவின்
விண்வெளி கனவு நனவாக
தொடங்கியது. விண்வெளி வீரர்,
வீராங்கனை பயிற்சி பெற
விண்ணப்பத்திருந்த சுமார்
மூவாயிரம்
நபர்களிலிருந்து ஆறு பேர்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களுள் ஒருவர் கல்பனா.
ஜான்ஸன் விண்வெளி தளத்தில்
பல்வேறு உடல் மருத்துவ
பரிசோதனைகள், கடுமையான
நேர்காணல்கள்
ஆகியவற்றை கடந்து
வெற்றிகரமாக
தேர்ந்தெடுக்கப்பட்டார் கல்பனா.

1995 ல்
பயிற்சி முடிந்து வின்வெளி
வீராங்கணையாக
தகுதி பெற்றார். அவரது முதல்
வின்வெளி பயணம் 1997 ஆம்
ஆண்டு நவம்பர் 19
ந்தேதி தொடங்கியது.
ஆறு வீரர்களுடன்
ப்ளோரிடாவில் கேப் கெனவரல்
முனையிலிருந்து விண்ணுக்கு
செலுத்தபட்டது கொலம்பியா
வான்கலம். அந்த வான்கலத்தின்
இயந்திர கரங்களை இயக்கும்
முக்கிய
பொறுப்பு கல்பனாவுக்கு
தரப்பட்டது. 16 நாட்கள்
விண்வெளியில் வானத்தையும்
நட்சத்திரங்களையும் நலம்
விசாரித்த கல்பனா 252
தடவை பூமியை சுற்றியதோடு
சுமார் ஆறரை மில்லியன் மைல்
தொலைவு பயணம் செய்தார்.

டிசம்பர் ஐந்தாம் நாள்
ஆறு விண்வெளி வீரர்களும்
வெற்றியோடு பூமிக்கு
திரும்பினர். அன்றைய தினம்
விண்வெளிக்கு சென்று வந்த
முதல் இந்திய பெண் என்ற
பெருமையை பெற்றார் கல்பனா.
முதல்
வின்வெளி பயணத்தை முடித்த
ஐந்து ஆண்டுகளில் மீண்டும்
விண்ணுக்கு செல்ல
கல்பனாவுக்கு அழைப்பு வந்தது.

முதல் பயணத்தில்
அவர்களை பத்திரமாக
தரையிறக்கிய
அதே கொலம்பியா வான்கலத்தில்
2003 ஆம் ஆண்டு சனவரி 16
ந்தேதி கல்பனா உட்பட ஏழு வீரர்கள்
விண்ணுக்கு பாய்ச்சப்பட்டனர்.
பிப்ரவரி முதல் தேதிவரை அந்த
பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.
சுமார் 80 அறிவியல்
ஆராய்ட்சிகளை அவர்கள்
நடத்தினர். அந்த பதினாறு நாள்
பயணத்தை முடித்துகொண்டு
வெற்றிக்கரமாக தரையிறங்க
பதினாறு நிமிடங்கள்
இருந்தபோது கொலம்பியா
வான்கலம் விண்ணில்
வெடித்து சிதறியது.

கல்பனா என்ற நம்பிக்கை பூ 41
வயதில் உதிர்ந்தது.

அஷ்வின்

Friday, December 13, 2013

Mother தாய்

உலகில் உள்ள அதிசயங்கள் ஏழு இந்த அதிசயங்களை காட்டிலும் உயர்ந்தவள் தான் தாய்.

Thursday, December 12, 2013

5 interesting facts about Rajni ரஜினியை பற்றி சுவாரஸ்யமான 5 தகவல்கள்

5 interesting facts about Rajni

ரஜினியை பற்றி சுவாரஸ்யமான 5 தகவல்கள்.... 5 interesting facts about Rajni

சென்னை, டிச.12-

இன்று தனது 63வது பிறந்த நாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி பலர் அறியாத சுவாரஸ்யமான 5 தகவல்கள் இதோ...

ரஜினி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலப்படங்களில் நடித்துள்ளபோதிலும் அவரது தாய்மொழியான மராத்தி மொழிப் படங்களில் இதுவரை நடித்ததில்லை.

இளம் வயதில் பல்வேறு இடங்களில் வேலை செய்த அவர் இறுதியாக கர்நாடக போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் வேலை செய்தார்.

ரஜினிக்கு பிடித்த நடிகர் கமல், அவருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார், கமல் படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

சிவாஜி படத்தின் வெற்றிக்கு பின் ரஜினியின் சம்பளம் 26 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிய நடிகர்களில் ஜாக்கி சானுக்கு பிறகு அதிக சம்பளம் பெறுபவர் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

ஓரிரு படங்களைத் தவிர, எந்த படத்திலும் ரஜினி இறந்ததாக காட்சிகள் இல்லை. ரஜினி இறந்ததாக காண்பிப்பதை ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்று டைரக்டர்கள் அச்சப்படுவதே இதற்கு காரணம்.
...

5 interesting facts about Rajni

14year old Australian who runs faster than Usain Bolt ஆஸ்திரேலிய அதிசய சிறுவன்

14year old Australian who runs faster than Usain Bolt
உசைன் போல்ட்டை விட மிக வேகமாக ஓடும் ஆஸ்திரேலிய அதிசய சிறுவன் 14year old Australian who runs faster than Usain Bolt

சிட்னி, டிச. 12-

ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி சிறுவன் ஜேம்ஸ் கல்லேகெர், அந்நாட்டின் ரெக்கார்டு புத்தகத்தில் அதிவேக ஓட்டக்காரராக இடம் பெற்றுள்ளார். உலகின் அதிவேக ஓட்டக்காரரான ஜமைக்கா நாட்டின் உசைன் போல்ட் தனது 14-வது வயதில் 200 மீட்டர் தூரத்தை 21.81 செகண்டுகளில் கடந்து சாதனை படைத்தார்.

ஆனால், 14 வயதான ஜேம்ஸ் கல்லேகர், டவுன்ஸ்வில்லே என்ற இடத்தில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் 200 மீட்டர் தூரத்தை கடக்க 21.73 செகண்டுகள் மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளார். இவர் உசைன் போல்ட்டை விட 0.08 செகண்டுகள் குறைவான நேரத்திலேயே குறிப்பிட்ட தூரத்தை கடந்துள்ளார்.

இந்த அதிசய சிறுவன் ஜேம்ஸ் கல்லேகர், வரும் 2016-ம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியா சார்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
...

14year old Australian who runs faster than Usain Bolt

Big mistakes in computer - பில்ஹேட்ஸ்

Big mistakes in computer - bilgates

Ctrl+Alt+Delete is mistake in computer..

கணனி வளர்ச்சிக்கு பங்காற்றிய ஜாம்பவான்களில் பில்ஹேட்ஸும் ஒருவர்.

இவர் உருவாக்கிய விண்டோஸ் இயங்குதளத்தில் Ctrl+Alt+Delete எனும் கட்டளை மூலம் லொகின் செய்வதற்கு அல்லது Task Manager இனை பெறும் வசதி தரப்பட்டுள்ளது.

எனினும் அவ்வாறு தரப்பட்டுள்ளமை தவறு என்று தற்போது விளக்கமளித்துள்ளார் பில்ஹேட்ஸ்.

இதற்கு காரணம் இந்த மூன்று விசைச்சாவிகளையும் ஒரே கையினால் பயன்படுத்த முடியாமல் இருப்பதே ஆகும் என தெரிவித்துள்ளார்.    

                       
Ctrl+Alt+Delete

Tuesday, December 10, 2013

Tamil Facebook kavithai இதயம் துடிப்பதை விட

 Tamil Facebook kavithai



"இதயம் துடிப்பதை விட இன்று என் கண்கள் அதிகமாய் துடிக்கின்றது ஒவ்வொரு முறை கண்கள் மூடும் போதும் உன் முகம் தெரிவதால்"...!!

Monday, December 9, 2013

Rahul Ganthi upset in Election Result ராஜதந்திரங்கள் வீணாகிவிட்டதே

 Rahul Ganthi upset in Election Result


நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே ...இன்னும் அதிக பயிற்சி வேண்டுமோ

Saturday, December 7, 2013

For my Lover என் காதலிக்கு

For my Lover

என் காதலிக்கு :-

1. முருகன்
கோவிலுக்கு போகாதே பெண்ணே !
மூன்றாவது மனைவியாக்கிவிடு
வான் உன்னைக் கண்டால்...

2.
லிப்டு கிடைக்குமா என்றேன்...எங்கி
ருந்து எங்குடா என்றாள் அவள்...லிப்
டூ லிப் என்றேன் ...

3. கோயிலில் உனக்காக
அர்ச்சனை செய்யும்போது, 'அவள்
நட்சத்திரம் என்ன?என்று கேட்டார்கள்.
'அவளே நட்சத்திரம்' என்றேன்..

4. நண்பர்களுக்கு Lol சொல்லுகையில்
அது "lots of laugh" என்றும்
உனக்கானால் அது "lots of love"
என்றும் அர்த்தப்படுகிறது..

5. நீ என்னை மறந்து விட்டாய்
என்பது எனக்கு தெரியும் , பாவம்
என்
இதயத்துக்கு தெரியாது அது உனக்காக
இன்னும்
துடித்து கொண்டு இருக்கிறது...

6. நீ பிறந்தநாள் வாழ்த்து கூறிய
ஒரு காரணமே போதுமானது, நான்
பிறந்ததற்காய்
பெருமை கொள்வதற்கு....

7.இதயத்தில் ஓட்டை என்று டாக்டர்
சொன்னார்,பாவம்
அவருக்கு எப்படி தெரியும் அது நீ
நுழைந்த வாசல் என்று...

8.நீ நெருப்பை போன்றவள் அதனால்
தான் உன்னை எங்கு பார்த்தாலும்
ஓடி சென்று அணைக்க
துடிக்கிறேன்....

9.நீ இல்லாத இடமெல்லாம்
இருட்டாகவே இருக்கிறது " .கரண்டுக்கு சொன்னது அல்ல.
காதலிக்கு சொன்னது...!!

10.பொறுக்கி' என்பதற்கும்
'ச்சீ.பொறுக்கி' என்பதற்கும்
எத்தனை வித்தியாசங்கள் பொண்ணுக
சொல்லும்போது..

Sunday, December 1, 2013

Status Update in tamil facebook message

Tamil message in facebook . Weekly updates

தெரிந்து கொள்வோம் :

1 அரிசியின் விலை கிலோ 44 ரூபாய்.
ஆனால் சிம் கார்டு இலவசமாகக்
கிடைக்கிறது.
2 பொது வினியோகத்தில் விற்கப்படும்
அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய்.
ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம்
மூன்று ரூபாய்.
3 வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான
வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால்
கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.
4 பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும்
வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட
அதாவது பாதி நேரத்தில்கூட
அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும்
வந்து சேர்வதில்லை!
5 ஒரு கிரிகெட்
குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக்
கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய
செல்வந்தர்கள் இருக்கிறார்கள்.
அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட
அறப் பணிகளுக்குச்
செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள்
மட்டும் இல்லை!
6 நாம் அணியும் ஊள்ளாடைகளும்,
ஆடைகளும், காலணிகளும்
குளிரூட்டப்பெற்ற கடைகளில்
விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும்
காய்கற்களும், பழங்களும் நடைபாதைக்
கடைகளில் விற்கப்படுகின்றன.
7 நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள்
செயற்கையான இரசாயனப் பொருட்களால்
தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ
உதவும் நீர்க் கலவை இயற்கையான
லெமனில் (எழுமிச்சையில்)
தயாரிக்கப்படுகிறது.
8 மொத்தமாகப் பள்ளிகளையும்,
கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு,
சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது.
சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர்
இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிர
ுக்கிறார்கள்.
9 கோதுமைக்கு வரியில்லை.
அது விளைபொருள்.
கோதுமையை மாவாகத் திரித்தால்
வரியுண்டு.
கோதுமை மாவை சப்பாத்தியாக
செய்துவிற்றால் வரியில்லை
அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச்
செய்துவிற்றால் வரி உண்டு!
10 பிரபலமாக வேண்டும் என்ற
அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு.
ஆனால் பிரபலாமவதற்கு உரிய
உண்மையான வழியில் செல்ல மட்டும்
ஒருவருக்கும் விருப்பம் இல்லை!
11 குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க
வேண்டும் என்போம். ஆனால்
தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும்
சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும்
டீயை மட்டும் சுவாரசியமாக
உறிஞ்சிக்குடிப்போம்!

#bask6

Tamil VIP sign in tamil language தமிழில் கையொப்பம் M.G.R signature and Bharathiyar signature

Tamil VIP sign in tamil language தமிழில் கையொப்பம்
Tamil VIP sign in tamil language தமிழில் கையொப்பம் M.G.R signature and Bharathiyar signature

Thursday, November 28, 2013

Tamils ​​have been in favor of a prime minister V.P.Singh தமிழர்களுக்கு சாதகமாக நடந்து கொண்ட ஒரு பிரதமர்

Tamils ​​have been in favor of a prime minister தமிழர்களுக்கு சாதகமாக நடந்து கொண்ட ஒரு பிரதமர்
வி.பி.சிங்

சமூகநீதி காவலர் வி.பி.சிங் நினைவு நாள் இன்று

Monday, November 25, 2013

Girls School Uniform குட்டைப் பாவாடை

Girls School Uniform

Tamil Nadu school girls uniform

மாற்றம் வேண்டும்....
*******************

மேற்கத்திய நாடுகளைப் போல, தற்போது இங்கும் பெரும்பாலான பள்ளிகளில் மாணவிகளின் சீருடையாகக் குட்டைப் பாவாடையே இருக்கிறது.

இவ்வாறு குட்டைப் பாவாடை அணிவது - ஆண்களைச் சுண்டி இழுக்கும் வகையிலும், ஆபாசத்தைத் தூண்டும் வகையிலும் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டை எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது.

சிறிய வயதிலேயே வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் கூடிய உடம்புவாகோடு அணிகிற இந்த மாதிரியான உடை, பொது இடங்களில் பலரது கவனத்தையும் சிதறடிக்கிறது என்கிற கருத்தை வீண்வாதம் என்று வெறுத்து ஒதுக்க முனைவது வீம்புக்காக மட்டுமானதாகவே இருக்கமுடியும்.

ஒரு மாணவியின் அப்பா, தனது மகளை அழைத்துப் போவதற்காக தனது ஸ்கூட்டரில் வந்தார். குட்டைப் பாவாடை அணிந்திருந்த அந்த மாணவி அந்த ஸ்கூட்டரின் பின் சீட்டில் ஏறி உட்கார முனையும்போது- அத்தனை விழிகளும் அங்குதான் மொய்த்தன.

இதில் கட்டாயம் மாற்றம் வேண்டும்.

இது பெண்களின் சுதந்திரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற எண்ணமோ அல்ல.

அந்தச் சகோதரிகளின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டே இந்தக் கருத்து,

தமிழகத்தில்....

மாணவியரையும், மாணவர்களையும் பாதிக்கும் வகையிலான உடைகளை ஆசிரியர்கள், ஆசிரியைகள் அணியக் கூடாது. அது பொதுமக்கள் மத்தியிலும் தவறான கருத்துக்களை ஏற்படுத்த வழி வகுத்து விடும் என்று.....

ஆசிரியைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிய தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்குநரகம்.....

இதிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்லது 805_s.jpg

தமிழின் சிறப்புகள் - Merits of Tamil

Mandir of hindu=6words.
masjid of muslim=6words.
church of christ=6words
geeta of hindu =5words
quran of muslim =5words.
bible of christ =5words.

all religion  and books says the same 6-5=1 (God IS ONE)

Saturday, November 23, 2013

Indian Congress and Srilanka காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா

Indian Congress and Srilanka காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா

Karikalan கரிகாலன்தான் உண்மையான மக்கள் தலைவன்


ராஜராஜசோழன் போல் ஒரு பெரிய கோயிலை மட்டும் கட்டி வைக்காமல் மக்களுக்காக கல்லணையை கட்டிய கரிகாலன்தான் உண்மையான மக்கள் தலைவன்! அதுவும் மலைகளே இல்லாத சமதரையில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அணை கட்டியது பிரமிக்க வைக்கிறது. இது தான் தமிழன் சாதனைகளில் முதலில் குறிக்கவேண்டும்!

@ரா நெடுமாறன்

"வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும் குடி உயர கோல் உயரும்" என்பதை சரியாக புரிந்துகொண்ட மக்களுக்கான மன்னன் கரிகாலன்.

Wednesday, November 20, 2013

Matrimony மாட்டுச் சந்தை

Matrimony tamil facebook share

முன்பெல்லாம் அதிக விலை கொடுத்து மாடுகளை வாங்கும் மாட்டுச் சந்தை அதிகம் இருந்தது, தற்போது அதிக விலை கொடுத்து மணப்பெண்களை விற்கும் இணையதள மேட்ரிமோனி சந்தைகள் அதிகமாகிவிட்டது.

அதிக நகை பணத்தோடு ஒருவர் வீட்டின் எஜமானி என்ற பெயரோடு காலடி எடுத்து வைத்தாலும் பேருக்குத்தான் அவள் எஜமானி...

நிஜத்தில் அவள்

சம்பளம் இல்லா வேலைக்காரி.

#நந்தமீனாள்

Monday, November 11, 2013

Today Status - இன்றைய நிலை

Today Status

இன்றைய நிலை...

பெரிய வீடு
ஆனா பெற்றவர்களுக்கு இடமில்லை...
விலை அதிகமான வாட்ச்
அதை பார்க்க நேரமில்லை...
நிலவை தொட்டாச்சு
ஆனா பக்கத்து வீட்ல யார் இருக்கான்னு தெரியாது...
மெத்த படிப்பு
பகுத்தறிவு இல்லை...
மருத்துவத்தில் முன்னேற்றம்
ஆரோக்கியத்தில் குறைபாடு...
அதிக வருமானம்
நிம்மதி இல்லை...
அதிகம் சாராயம்
குடிநீர் பற்றாக்குறை...
அதிக முகநூல் நட்பு
உயிர் நட்பு இல்லை...
அதிகம் மனிதர்கள்
மனித நேயம் குறைந்து விட்டது..

Thursday, October 31, 2013

எருமை மாடுமாதிரி tamil facebook comedy tamil facebook jokes

அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கொண்டிருந்த இளைஞன்.....

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக்கொண்டிருந்த

ஒரு இளைஞன். அடிக்கடி

நோய் வாய்ப்பட்டுக்கொண்டிருந்தான்.

பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப்பார்த்து,
மருந்து, இஞ்செக்‌ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்கிடைக்கவில்லை.

கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி

ஒரு நாள், "நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு,

ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே(மிருக டாக்டர்)போய்உடம்பைக் காட்டுங்க!

அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்" என்றாள்.

என்னது
மிருக டாக்டர்கிட்டேயா?

உனக்கென்ன மூளைகெட்டுப் போச்சா?'ன்னு சீறினான் கணவன்.
'எனக்கொண்ணும் கெட்டுப் போகல!

உங்களுக்குத்தான் எல்லாமேகெட்டுப் போய் கிடக்கு!

காலாங் காலத்தாலே கோழி மாதிரிவிடியறதுக்கு
முன்னமேயே

எழுந்திருக்கீங்க!

அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு,

குரங்கு மாதிரி' லபக் லபக்'னு ரெண்டு வாய்தின்னுட்டு,

பந்தயக் குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப்போறீங்க!

அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க!

உங்களுக்கு கீழேவேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க!

அப்புறம் ஆபிஸ்விட்டவுடனே,

ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்குவர்றீங்க!

வந்ததும்வராததுமா,நாள்பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே

நாய் மாதிரி என் மேலே சீறி விழறீங்க!

அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை 'சரக் சரக்'னு முழுங்கிட்டு,

எருமை மாடுமாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

மறுபடியும் விடிஞ்சாஅதேமாதிரி

கோழி கதைதான்!இப்படி இருக்கிறவங்களை

மனுஷ டாக்டர் எப்படிங்க குணப்படுத்த முடியும்?

அதனாலதான் சொல்றேன், நாளைக்கே

ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!

"என்று ஒரே மூச்சில்சொல்லி முடித்தாள் மனைவி.

என்னபதில்சொல்வதென்றுதெரியாமல்

கணவன் முழிக்க,

மனைவி சொன்னள்`

கோட்டான் மாதிரி முழிக்காதீங்க'.

Source: Facebook

Wednesday, October 30, 2013

Tuesday, October 15, 2013

In the first women navel ring தொப்புளில் வளையம் போடும் பெண்கள்

 In the first women navel ring


நாகரீகம் என்ற பெயரில் பல வித்தியாசமான மாற்றங்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறன. அதில் நன்மையும் தீமையும் சரிசமமாக கலந்திருக்கிறது. சொல்லப்போனால், அவற்றில் தீமை தான் மேலோங்கி நிற்கிறது. அப்படி வளர்ந்து வரும் நாகரீகத்தில் ஒன்றாக விளங்குவது தான் 'பொடி பியர்சிங்' எனப்படும் தொப்பிளில் துளையிடுதல்.

நம் சமூகத்தில் உடம்பில் துளையிடுதல் என்பது ஒரு முக்கிய நாகரீகமாகவும், பண்பாடாகவும் மாறி வருகிறது. எந்த ஒரு காரணத்திற்காக இருந்தாலும், உடம்பில் துளையிடுவது என்பது பெரிய முடிவாகும். உடம்பில் துளையிடுவதால் ஏற்படும் உடல்நல இடர்பாடுகள் என்னவென்று பார்ப்போம்…

தொற்று என்பது உடம்பில் துளையிடுவதால் ஏற்படும் பொதுவான பிரச்சினை. இதில் கவனம் செலுத்தவில்லை என்றாலோ அல்லது உரிய சிகிச்சையை சரியான காலத்தில் எடுக்கவில்லை என்றாலோ, தழும்பு ஏற்படுவதுடன் இரத்தம் நஞ்சாகிவிடும். அதிலும் சரிவர கவனம் செலுத்தாவிட்டால் தழும்பை உண்டாக்கிவிடும்.

குறிப்பாக தொற்றுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக ஒழுங்கில்லாமல் துளையிடுதல், துளையிட்ட பின் சரியாக பராமரிக்காமல் போவது மற்றும் துளையிட்ட இடத்தில் பயன்படுத்தும் நகைகள் போன்றவை ஆகும்.

உலோகங்கள் உடலில் படும்போது சரும ஒவ்வாமை ஏற்படுவதற்கு அந்த உலோகங்களே காரணியாக விளங்குகிறது. அதனால் உடம்பில் துளையிடும் சில வகை அணிகலன்களால், இவ்வகை ஒவ்வாமைகள் ஏற்படுவதுண்டு. மேலும் இத்தகைய ஒவ்வாமைகள் சுவாசப் பிரச்சினை, சொறி மற்றும் துளையிட்ட இடத்தில் வீக்கம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.

சில நேரம் ஒவ்வாமை தீவிரமடைந்தால் அது மருத்துவமனை வரை போகும் நடவடிக்கையாக திகழும். ஒழுங்காக துளையிடவில்லை என்றாலோ அல்லது துளையிட்ட இடத்தில் குத்தப்படும் அணிகலன் சரியாக குத்தப்படவில்லை என்றாலோ நரம்பு சிதைவு ஏற்படும்.

அதிலும் தவறான இடத்தில் துளையிட்டால், அங்குள்ள நரம்பையும் சேர்த்து துளையிட வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமல்லாது துளையிட்ட இடத்தைச் சுற்றியுள்ள இடங்களும் நிரந்தரமாக செத்துப்போகும். குறிப்பாக நாக்கில் துளையிடும் போது, நரம்புகள் பாதிப்புக்குள்ளாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

முக்கியமாக துளையிடுபவர் வல்லுனராக இல்லாத போது தான், இத்தகைய பிரச்சினை ஏற்படும். துளையிடுவதில் வல்லுநர் இல்லாதவர் சுகாதாரமற்ற இடத்தில் துளையிட்டால் இரத்த சம்பந்தமான நோய்களான எச்.ஐ.வி. கிருமி, ஈரல் அழற்சி மற்றும் இதர நோய்களை ஏற்படுத்தும்.

Monday, October 14, 2013

Tuesday, October 8, 2013

Popular Posts