Saturday, December 14, 2013

Kalpana chawla கல்பனா

Kalpana chawla கல்பனா

வின்வெளி வீரப் பெண்மணி :

கல்பனா தன்
கிராமத்து தெருக்களில்
நின்றுகொண்டு ஆகாயத்தை
பார்த்து வியப்பார். ஆகாயத்தில்
அமைதியை கிழித்துக்கொண்டு
போகும் விமானங்களின்
பாதையை இமைகொட்டாமல்
பார்த்துகொண்டு இருப்பார்.

தன்
சகோதரனின் மோட்டார்
சைக்கிளில்
பின் இருக்கையில்
அமர்ந்து பயணிக்கும்
போதெல்லாம்
அவரது பார்வை ஆகாயத்தை
நோக்கிதான் உயரும். கர்னாவில்
உள்ள தாஹூர் பள்ளியில் ஆரம்ப
கல்வியை முடித்த
கல்பனா சண்டிகாரில் பஞ்சாப்
பொறியியல் கல்லூரியில்
விமான பொறியியல் பயில
விரும்பினார். அந்த துறையில்
பயின்ற மற்ற அனைவரும்
ஆண்களாக இருந்ததால் முதலில்
பெற்றோர்கள் மறுத்தனர்.

ஆனால் கல்பனாவின்
எண்ணத்தை அவர்களால் மாற்ற
முடியவில்லை. அந்த
கல்லூரியில் 1982 ல்
இளங்கலை பட்டம் பெற்றார்.
ஆகாயத்தைப்
பற்றியே கனவு கண்டு
கொண்டிருந்த
அவரை அமெரிக்கா வரவேற்றது.

1984 ஆம் ஆண்டு டெக்ஸஸ்
பல்கலைகழகத்தில்
விண்வெளி பொறியியல்
துறையில் முதுகலைப் பட்டம்
பெற்றார். நான்கு ஆண்டுகள்
கழித்து கொலோராடோ பல்கலை
கழகத்தில் அதே பொறியியல்
துறையில் முனைவர் பட்டம்
பெற்றார். முனைவர் பட்டம் பெற்ற
உடனேயே நாசா எனப்படும்
அமெரிக்க
விண்வெளி ஆய்வு நிலையத்தில்
சேர்ந்தார். எளிய மொழியில்
விளக்குவதற்கு சிரமமான சில
ஆராய்ட்சிகளில் ஈடுபட்டார்.

1993 ல் கல்பனா ஒரு தனியார்
நிறுவனத்தில்
ஆய்வு விஞ்ஞானியாக
சேர்ந்தார். அதற்கு அடுத்த
ஆண்டே கல்பனாவின்
விண்வெளி கனவு நனவாக
தொடங்கியது. விண்வெளி வீரர்,
வீராங்கனை பயிற்சி பெற
விண்ணப்பத்திருந்த சுமார்
மூவாயிரம்
நபர்களிலிருந்து ஆறு பேர்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களுள் ஒருவர் கல்பனா.
ஜான்ஸன் விண்வெளி தளத்தில்
பல்வேறு உடல் மருத்துவ
பரிசோதனைகள், கடுமையான
நேர்காணல்கள்
ஆகியவற்றை கடந்து
வெற்றிகரமாக
தேர்ந்தெடுக்கப்பட்டார் கல்பனா.

1995 ல்
பயிற்சி முடிந்து வின்வெளி
வீராங்கணையாக
தகுதி பெற்றார். அவரது முதல்
வின்வெளி பயணம் 1997 ஆம்
ஆண்டு நவம்பர் 19
ந்தேதி தொடங்கியது.
ஆறு வீரர்களுடன்
ப்ளோரிடாவில் கேப் கெனவரல்
முனையிலிருந்து விண்ணுக்கு
செலுத்தபட்டது கொலம்பியா
வான்கலம். அந்த வான்கலத்தின்
இயந்திர கரங்களை இயக்கும்
முக்கிய
பொறுப்பு கல்பனாவுக்கு
தரப்பட்டது. 16 நாட்கள்
விண்வெளியில் வானத்தையும்
நட்சத்திரங்களையும் நலம்
விசாரித்த கல்பனா 252
தடவை பூமியை சுற்றியதோடு
சுமார் ஆறரை மில்லியன் மைல்
தொலைவு பயணம் செய்தார்.

டிசம்பர் ஐந்தாம் நாள்
ஆறு விண்வெளி வீரர்களும்
வெற்றியோடு பூமிக்கு
திரும்பினர். அன்றைய தினம்
விண்வெளிக்கு சென்று வந்த
முதல் இந்திய பெண் என்ற
பெருமையை பெற்றார் கல்பனா.
முதல்
வின்வெளி பயணத்தை முடித்த
ஐந்து ஆண்டுகளில் மீண்டும்
விண்ணுக்கு செல்ல
கல்பனாவுக்கு அழைப்பு வந்தது.

முதல் பயணத்தில்
அவர்களை பத்திரமாக
தரையிறக்கிய
அதே கொலம்பியா வான்கலத்தில்
2003 ஆம் ஆண்டு சனவரி 16
ந்தேதி கல்பனா உட்பட ஏழு வீரர்கள்
விண்ணுக்கு பாய்ச்சப்பட்டனர்.
பிப்ரவரி முதல் தேதிவரை அந்த
பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.
சுமார் 80 அறிவியல்
ஆராய்ட்சிகளை அவர்கள்
நடத்தினர். அந்த பதினாறு நாள்
பயணத்தை முடித்துகொண்டு
வெற்றிக்கரமாக தரையிறங்க
பதினாறு நிமிடங்கள்
இருந்தபோது கொலம்பியா
வான்கலம் விண்ணில்
வெடித்து சிதறியது.

கல்பனா என்ற நம்பிக்கை பூ 41
வயதில் உதிர்ந்தது.

அஷ்வின்

No comments:

Post a Comment

Popular Posts