5 interesting facts about Rajni
ரஜினியை பற்றி சுவாரஸ்யமான 5 தகவல்கள்.... 5 interesting facts about Rajni
சென்னை, டிச.12-
இன்று தனது 63வது பிறந்த நாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி பலர் அறியாத சுவாரஸ்யமான 5 தகவல்கள் இதோ...
ரஜினி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலப்படங்களில் நடித்துள்ளபோதிலும் அவரது தாய்மொழியான மராத்தி மொழிப் படங்களில் இதுவரை நடித்ததில்லை.
இளம் வயதில் பல்வேறு இடங்களில் வேலை செய்த அவர் இறுதியாக கர்நாடக போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் வேலை செய்தார்.
ரஜினிக்கு பிடித்த நடிகர் கமல், அவருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார், கமல் படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
சிவாஜி படத்தின் வெற்றிக்கு பின் ரஜினியின் சம்பளம் 26 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிய நடிகர்களில் ஜாக்கி சானுக்கு பிறகு அதிக சம்பளம் பெறுபவர் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.
ஓரிரு படங்களைத் தவிர, எந்த படத்திலும் ரஜினி இறந்ததாக காட்சிகள் இல்லை. ரஜினி இறந்ததாக காண்பிப்பதை ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்று டைரக்டர்கள் அச்சப்படுவதே இதற்கு காரணம்.
...
5 interesting facts about Rajni
No comments:
Post a Comment