Thursday, December 12, 2013

14year old Australian who runs faster than Usain Bolt ஆஸ்திரேலிய அதிசய சிறுவன்

14year old Australian who runs faster than Usain Bolt
உசைன் போல்ட்டை விட மிக வேகமாக ஓடும் ஆஸ்திரேலிய அதிசய சிறுவன் 14year old Australian who runs faster than Usain Bolt

சிட்னி, டிச. 12-

ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி சிறுவன் ஜேம்ஸ் கல்லேகெர், அந்நாட்டின் ரெக்கார்டு புத்தகத்தில் அதிவேக ஓட்டக்காரராக இடம் பெற்றுள்ளார். உலகின் அதிவேக ஓட்டக்காரரான ஜமைக்கா நாட்டின் உசைன் போல்ட் தனது 14-வது வயதில் 200 மீட்டர் தூரத்தை 21.81 செகண்டுகளில் கடந்து சாதனை படைத்தார்.

ஆனால், 14 வயதான ஜேம்ஸ் கல்லேகர், டவுன்ஸ்வில்லே என்ற இடத்தில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் 200 மீட்டர் தூரத்தை கடக்க 21.73 செகண்டுகள் மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளார். இவர் உசைன் போல்ட்டை விட 0.08 செகண்டுகள் குறைவான நேரத்திலேயே குறிப்பிட்ட தூரத்தை கடந்துள்ளார்.

இந்த அதிசய சிறுவன் ஜேம்ஸ் கல்லேகர், வரும் 2016-ம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியா சார்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
...

14year old Australian who runs faster than Usain Bolt

No comments:

Post a Comment

Popular Posts