Indian goverment status
அன்றே அம்மணமான இந்திய ஒன்றியம்!
இந்தியாவின் முதல் குடிமகன்,முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களை அமெரிக்க வானூர்தி நிலையத்தில் ஆடை பரிசோதனை செய்த செய்தி ஊடங்களில் வந்த போது இது போல் இந்திய ஒன்றியம் கொதிக்கவில்லையே ஏன்? அன்று அவமானப்படுத்தப்பட்டவர் தமிழர் என்பதாலா?
அமெரிக்க தூதரக அதிகாரி என்ற உயர் பதவியில் இருந்து கொண்டு ஏழை இந்தியப் பெண்ணிற்கு ஊதியம் கொடுக்காமல் கொடுமைப் படுத்தி, அமெரிக்க விசா பெறுவதற்காக தவறான தகவல் களை அளித்து அமெரிக்க நாட்டையே ஏமாற்றி இருக்கிறார் என்ற அடிப்படையில் தேவயானி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு ள்ளார்.அவருக்காக இந்திய ஒன்றியம் மல்லுக் கட்டி நிற்கிறது .பரிந்து பேசுகிறது.
இந்தியருக்கு, இந்திய ஒன்றியத்திற்கு நேர்ந்த அவமானமாக நடுவண் அரசு இதை குறிப்பிடுகிறது
தவறு செய்த தேவயானியை பணியிலிருந்து நீக்கி இந்தியாவிற்கு திருப்பி அழைத்து தண்டனையை வழங்க வேண்டிய இந்தியா மாறாக பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணையும் அவரது குடும்பத்தையும் குற்றவாளிகளாக்கி உள்ளது . அந்த ஏழைப் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை யைப் பற்றி, அவரும் இந்தியர் தானே என்பதைப் பற்றி இந்தியா கவலைப் படவில்லை.
தான் கைது செய்யப்படலாம் என்று முன்பே அறிந்திருந்த தேவயானி தில்லி உயர்நீதிமன்ற த்தில் தடை பெற்றிருக்கிறார் என்றால், அவர் தெரிந்தே செய்திருக்கும் தவறு என்பதை இந்திய ஒன்றியம் உணர்ந்திருந்த போதும் உடனடியாக எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. .
இது ஒரு விரும்பத்தகாத செயல் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
.
டில்லி வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினருடனான சந்திப்பை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, நரேந்திர மோடி, ராகுல் காந்தி, நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் ரத்து செய்து விட்டனர்.
இந்தியாவிலுள்ள அனைத்து அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள சில அடையாள அட்டைகளை திருப்பியளிக்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் உணவு மற்றும் மதுபானம் உட்பட அனைத்து வகையான பொருட் களை இறக்குமதி செய்யும் சலுகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டில்லி அமெரிக்கத் தூதரகத்தின் முன்னுள்ள பாதுகாப்பு அரண்கள், தூதரக வாயிலில் பாதுகாப்பு தற்காப்புத் தடைகள் விலக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அமெரிக்கப் பள்ளிகளில் பணிபுரிவோரின் வருமானம், வங்கி கணக்குகள், வருமான வரி தகவல்கள் மற்றும் விசா தகவல்களை மத்திய அரசிடம் அளிக்கக் கோரப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் என்று இந்திய சட்ட அமைப்பு சொல்கிறது .அவர் அவமானப்படுத்தப்படும் பொழுது இதுப் போன்ற நடவடிக்கைகளை இந்திய ஒன்றியம் ஏன் எடுக்க வில்லை ?அவர் தமிழர் என்ற ஒரே கரணிய த்திற்காக அன்று வெறும் அறிக்கையோடு அமைதியாக இருந்தது.
இன்று தேவயானிக்கான சட்ட பாதுகாப்பை அதிகரிக்க இந்தியா அவரை ஐநா மன்ற இந்திய தூதரகப் அதிகாரியாக நியமித்திருப்பது இந்திய "நீதி" யை உலகில் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இனியாவது புரிந்துக் கொள்ளுங்கள் தமிழர்களே. நீங்கள் முதலில் தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று
No comments:
Post a Comment