Img பெண்ணின் படுக்கை மெத்தையில் 2 மாதம் வாழ்ந்த மலைப்பாம்பு A snake lived in this woman couch for two months
வாஷிங்டன், ஜன. 1-
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் கிராண்ட் ராபிட்ஸ் பகுதியில் வசித்து வரும் ஹோலி ரைட் என்ற பெண், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, தெருவில் கிடந்த ஒரு பழைய சோபாவை பார்த்துள்ளார். அது கிழியாமல் இருந்ததால் தூசி தட்டி தனது வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். பின்னர் அதனை தனது கட்டிலில் போட்டு தினமும் அதில் அமர்ந்து, புத்தகம் படிப்பது, இமெயில் பார்ப்பது மற்றும் தனது நாய்க்குட்டியை உட்கார வைப்பது என பல வகைகளில் பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அந்த சோபாவில் இருந்து 4 அடி நீள மலைப்பாம்பு எட்டிப் பார்த்துள்ளது. இதனால் ஹோலி ரைட் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சுதாரித்த அவர், அந்த பாம்பை லாவகமாக பிடித்து ஒரு பெட்டியில் பாதுகாப்பாக அடைத்து வைத்தார். பின்னர் அதனை விலங்கியல் நிபுணரிடம் ஒப்படைக்க முடிவு செய்திருந்தார். ஆனால், அதற்கு முன்பே அந்த பாம்பு இறந்துவிட்டது.
முன்னதாக அந்த பாம்பு சோபாவில் இருந்து வெளிப்பட்டதையும், அதை பிடித்ததையும் நண்பரின் உதவியுடன் வீடியோவில் பதிவு செய்து வைத்துள்ளார் ஹோலி ரைட்.
இதுபற்றி அவர் கூறுகையில், "இரண்டு மாதமாக என் படுக்கையறையில் மெத்தையில் அந்த பாம்பு வசித்திருக்கிறது. அது பெரிய பாம்பு என்று சொல்ல முடியாது. தெருவில் இருந்து சோபாவை எடுக்கும்போது நன்றாக இருந்தது. மெத்தையை அகற்றியும் பார்த்தோம். அதில் எதுவும் தெரியவில்லை. இந்த வாரம் திடீரென அது வெளிப்பட்டது. மெத்தையின் ஒரு பக்க துணியைக் கிழித்து பாம்பை வெளியில் எடுத்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது இறந்துவிட்டது" என்றார்.
...
No comments:
Post a Comment