Img பேஸ்புக் நட்பை முறித்ததால் மாணவி மீது வெந்நீரை ஊற்றிய வாலிபர் young thrown Boiling water on schoolgirl after remove facebook friend
முசாபர்பூர், ஜன. 5-
பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் பேஸ்புக் நட்பை முறித்த பள்ளி மாணவி மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய சம்பவம் நடந்துள்ளது.
8-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியின் தந்தையிடம் முசாபர் நகர் அரசு கல்லூரி மாணவர் ஒருவர் டியூசன் படித்து வந்தார். அப்போது மாணவிக்கும், கல்லூரி மாணவனுக்குமிடையே அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் பேஸ்புக் தளத்தில் நண்பர்களாக இணைந்தனர்.
சமீபகாலமாக அந்த மாணவர் தவறான செய்திகளை பேஸ்புக்கில் போஸ்ட் செய்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த மாணவி, பேஸ்புக்கில் உள்ள தனது நண்பர்கள் பட்டியலில் இருந்து சமீபத்தில் அந்த மாணவனை நீக்கியுள்ளார். இதனால் அவன் மாணவியின் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளான்.
இந்நிலையில், தனது அடையாள அட்டையை தேடும் சாக்கில், கடந்த புதன்கிழமையன்று மாணவியின் வீட்டுக்கு வந்த மாணவன், திடீரென மாணவியின் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளான்.
வெந்நீர் பட்டதால் மாணவியின் முகம் வெந்தது. 20 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாணவனைத் தேடி வருகின்றனர்.
...
No comments:
Post a Comment