Sunday, January 5, 2014

இந்திய கோவில் உண்டியல்களில் காணிக்கையாக போடப்பட்ட நாணயங்களை திரும்பப் பெற இலங்கை முயற்சி Lanka wants to recover coins donated in Indian temples

Img இந்திய கோவில் உண்டியல்களில் காணிக்கையாக போடப்பட்ட நாணயங்களை திரும்பப் பெற இலங்கை முயற்சி Lanka wants to recover coins donated in Indian temples

கொழும்பு, ஜன. 5-

இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற புத்த ஆலயங்களை தரிசிப்பதற்காக அண்டை நாடான இலங்கையில் இருந்து ஏராளமான சிங்கள மக்கள் ஆண்டுதோறும் இங்கு வந்து செல்கின்றனர். இதேபோல், தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற இந்து கோவில்களுக்கு ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்களும் தரிசனத்திற்காக வருகின்றனர்.

இவ்வாறு வரும் சிங்கள மற்றும் தமிழ் பக்தர்கள் நம் நாட்டின் கோவில் உண்டியல்களில் இலங்கை ரூபாய் நோட்டுக்களையும், சில்லரை நாணயங்களையும் காணிக்கையாக போட்டுவிட்டு செல்கின்றனர்.

இலங்கையில் தற்போது சில்லரை நாணயங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. உலோகங்களின் விலைவாசியை ஒப்பிட்டுப் பார்க்கையில் புதிய நாணயங்களை உருவாக்கினால் அந்த நாணயத்தின் மதிப்பைவிட தயாரிப்பு செலவு அதிகமாகி விடும் என இலங்கை அரசு கருதுகிறது.

இந்நிலையில், இலங்கை மக்கள் இந்தியாவின் கோவில் உண்டியல்களில் காணிக்கையாக போட்டு சென்ற இலங்கை நாட்டின் சில்லரை நாணயங்கள் சுமார் 20 டன் வரை இந்தியாவிடம் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

எனவே, அந்த 20 டன் நாணயங்களையும் அதற்குரிய தொகையை தந்து இந்திய அரசிடமிருந்து வாங்கிக் கொண்டு, தற்போதய நாணய பற்றாக்குறையும், அனாவசிய செலவினங்களையும் சமாளிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

...

No comments:

Post a Comment

Popular Posts