Tuesday, February 18, 2014

அந்த வாழைபழம் தான் இது

மரபணு மாற்றப்பட்ட மஞ்சள் வாழைப்பழம் : அதிர்ச்சி தகவல்

வாழைப்பழம்.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழமான வாழைப்பழம் இப்போது சாபமாக மாறி வருகிறது.

இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள் பூம்பழம், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூரவள்ளி, ஏலக்கி, செவ்வாழை ஆகிய வாழைப்பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும். இவை ஒவ்வொன்றும் உடல் நலனுக்கு நன்மை செய்பவை.

இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் வயிறு கோளாறு இருப்பவர்களும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.

ஆனால், இப்போதெல்லாம் தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று ஞாபகமாக எச்சரித்து அனுப்புகிறார்கள்.

காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன் என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

குழந்தைகளுக்கோ உறவினர்களுக்கோ வாழைப்பழம் வாங்க போகும் போது இந்த பெரிய வகை மஞ்சள் பழங்களை வாங்காதீர்கள். நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள், மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

**************

1 comment:

Popular Posts