Monday, January 6, 2014

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ?



இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம் . அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம் . முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.

அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.
இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.
ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.
ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள். 

 

Sunday, January 5, 2014

இந்திய கோவில் உண்டியல்களில் காணிக்கையாக போடப்பட்ட நாணயங்களை திரும்பப் பெற இலங்கை முயற்சி Lanka wants to recover coins donated in Indian temples

Img இந்திய கோவில் உண்டியல்களில் காணிக்கையாக போடப்பட்ட நாணயங்களை திரும்பப் பெற இலங்கை முயற்சி Lanka wants to recover coins donated in Indian temples

கொழும்பு, ஜன. 5-

இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற புத்த ஆலயங்களை தரிசிப்பதற்காக அண்டை நாடான இலங்கையில் இருந்து ஏராளமான சிங்கள மக்கள் ஆண்டுதோறும் இங்கு வந்து செல்கின்றனர். இதேபோல், தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற இந்து கோவில்களுக்கு ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்களும் தரிசனத்திற்காக வருகின்றனர்.

இவ்வாறு வரும் சிங்கள மற்றும் தமிழ் பக்தர்கள் நம் நாட்டின் கோவில் உண்டியல்களில் இலங்கை ரூபாய் நோட்டுக்களையும், சில்லரை நாணயங்களையும் காணிக்கையாக போட்டுவிட்டு செல்கின்றனர்.

இலங்கையில் தற்போது சில்லரை நாணயங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. உலோகங்களின் விலைவாசியை ஒப்பிட்டுப் பார்க்கையில் புதிய நாணயங்களை உருவாக்கினால் அந்த நாணயத்தின் மதிப்பைவிட தயாரிப்பு செலவு அதிகமாகி விடும் என இலங்கை அரசு கருதுகிறது.

இந்நிலையில், இலங்கை மக்கள் இந்தியாவின் கோவில் உண்டியல்களில் காணிக்கையாக போட்டு சென்ற இலங்கை நாட்டின் சில்லரை நாணயங்கள் சுமார் 20 டன் வரை இந்தியாவிடம் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

எனவே, அந்த 20 டன் நாணயங்களையும் அதற்குரிய தொகையை தந்து இந்திய அரசிடமிருந்து வாங்கிக் கொண்டு, தற்போதய நாணய பற்றாக்குறையும், அனாவசிய செலவினங்களையும் சமாளிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

...

Saturday, January 4, 2014

பேஸ்புக் நட்பை முறித்ததால் மாணவி மீது வெந்நீரை ஊற்றிய வாலிபர் young thrown Boiling water on schoolgirl after remove facebook friend

Img பேஸ்புக் நட்பை முறித்ததால் மாணவி மீது வெந்நீரை ஊற்றிய வாலிபர் young thrown Boiling water on schoolgirl after remove facebook friend

முசாபர்பூர், ஜன. 5-

பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் பேஸ்புக் நட்பை முறித்த பள்ளி மாணவி மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய சம்பவம் நடந்துள்ளது.

8-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியின் தந்தையிடம் முசாபர் நகர் அரசு கல்லூரி மாணவர் ஒருவர் டியூசன் படித்து வந்தார். அப்போது மாணவிக்கும், கல்லூரி மாணவனுக்குமிடையே அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் பேஸ்புக் தளத்தில் நண்பர்களாக இணைந்தனர்.

சமீபகாலமாக அந்த மாணவர் தவறான செய்திகளை பேஸ்புக்கில் போஸ்ட் செய்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த மாணவி, பேஸ்புக்கில் உள்ள தனது நண்பர்கள் பட்டியலில் இருந்து சமீபத்தில் அந்த மாணவனை நீக்கியுள்ளார். இதனால் அவன் மாணவியின் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளான்.

இந்நிலையில், தனது அடையாள அட்டையை தேடும் சாக்கில், கடந்த புதன்கிழமையன்று மாணவியின் வீட்டுக்கு வந்த மாணவன், திடீரென மாணவியின் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளான்.

வெந்நீர் பட்டதால் மாணவியின் முகம் வெந்தது. 20 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாணவனைத் தேடி வருகின்றனர்.
...

பார்டர் கடை பரோட்டா Border Protta

பார்டர் கடை பரோட்டா: Border Protta

குற்றாலம் என்று சொன்னதும் பல பேருக்கு அருவியைத் தாண்டி ஞாபகத்துக்கு வருவது பார்டர் கடை பரோட்டாவும், நாட்டுக் கோழியும்தான். அங்கு 3 பரோட்டா கடைகள் இருக்கின்றன, மூன்றுமே அதன் தனித்தன்மையான சுவைகளைக் கொண்டிருக்கிறது. பரோட்டாவில் போய் என்ன பெரிய தனித்தன்மையான சுவை என்று நீங்கள் கேட்க்கலாம். ஆனால் இந்த பார்டர் பரோட்டாவில் உள்ளதே… வெண்ணை பரோட்டா போன்று வழுக்கிக்கொண்டு  தொண்டைக்குள் போகிறது. இங்கு கடைக்காரர்களே பரோட்டாவை பிய்த்துப்போட்டு சால்னா (Gravy) என்று சொல்லப்படும் நாட்டுக்கோழி குழம்பை ஊற்றுகிறார் பாருங்கள்.. அட அட அட அப்படி ஒரு சுவை. ஒருமுறை உண்டால் நிச்சயம் இந்த நாட்டுக்கோழி சால்னாவின் சுவைக்கு அடிமையாகிவிடுவோம்.
அட இவ்வளவு தானா என்று கேட்போர்க்கு இங்கே கோழி 65, மிளகு கோழி, கோழி கொத்து (chops) என எல்லாம் நாட்டுக்கோழியில் செய்தவை. அத்தனையும் அதிசுவை மிகுந்துள்ளது. அதுவும் கார விரும்பிகளுக்கு கொண்டாட்டம் தான். காரத்துக்கு முழுக்க முழுக்க பெப்பர் போட்டு பிரட்டி எடுத்து தருகிறார்கள். இவை அனைத்தும் ஒளிவு மறைவுமின்றி நம் கண் முன்னே செய்து தரப்படுவதால் சுத்தமாக செய்யப்படுகிறதாயென்று  நீங்களே பார்த்துக்கொள்ளலாம்

Friday, January 3, 2014

How to Change Facebook Name and Date of Birth பேஸ்புக் பெயரை மாற்ற

இளையோரால் அதிகம் விரும்பப்படும் சமூக வலைத்தளங்களில் முக்கியமான வலைத்தளமாகும் பேஸ்புக் இதில் ஒரு குறிப்பிட்ட தடவைகள் தான் பாவனையாளர் பெயரை மாற்ற அனுமதிக்குறது என்பது நான் யாவரும் அறிந்ததே இருந்தும் பெயரை இன்னொரு விதத்தில் மாற்ற அனுமதிக்கின்றது அது பற்றிதான் இந்த பதிவு 



முறை 1

உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்நுழைந்து facebook search bar இல்
help centre ரை தேடி உள் நுழையவும் 

help center => manage your account => account setting => editing your setting => change your name and birthday => my name change request was not approved = > let us know 


முறை 2

help center => manage your account => account setting => change your name and birthday => my name change request was not approved = > let us know 


இரண்டாவது முறை மூலம் பயன் படுத்தினால் உங்கள் அடையாள அட்டை பிரதியை தரவேற்றி பெயரை உறுதி படுத்தி மாற்றலாம். 

சிலரது கணக்கில் 2 வது முறையே பயன்படுத்த கூடியதாக இருக்கும் let us know இல் உள் நுழைந்து அதில் உங்கள் பெயர் விபரங்களை பதிந்து மாற்றி கொள்ளுங்கள் .. 



 

Thursday, January 2, 2014

10 habits that affect the brain மூளையைப் பாதிக்கும் 10 பழக்கம்



10 habits that affect the brain மூளையைப் பாதிக்கும் 10 பழக்கம்


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது. 
 

Wednesday, January 1, 2014

பெண்ணின் படுக்கை மெத்தையில் 2 மாதம் வாழ்ந்த மலைப்பாம்பு A snake lived in this woman couch for two months

Img பெண்ணின் படுக்கை மெத்தையில் 2 மாதம் வாழ்ந்த மலைப்பாம்பு A snake lived in this woman couch for two months

வாஷிங்டன், ஜன. 1-

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் கிராண்ட் ராபிட்ஸ் பகுதியில் வசித்து வரும் ஹோலி ரைட் என்ற பெண், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, தெருவில் கிடந்த ஒரு பழைய சோபாவை பார்த்துள்ளார். அது கிழியாமல் இருந்ததால் தூசி தட்டி தனது வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். பின்னர் அதனை தனது கட்டிலில் போட்டு தினமும் அதில் அமர்ந்து, புத்தகம் படிப்பது, இமெயில் பார்ப்பது மற்றும் தனது நாய்க்குட்டியை உட்கார வைப்பது என பல வகைகளில் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அந்த சோபாவில் இருந்து 4 அடி நீள மலைப்பாம்பு எட்டிப் பார்த்துள்ளது. இதனால் ஹோலி ரைட் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சுதாரித்த அவர், அந்த பாம்பை லாவகமாக பிடித்து ஒரு பெட்டியில் பாதுகாப்பாக அடைத்து வைத்தார். பின்னர் அதனை விலங்கியல் நிபுணரிடம் ஒப்படைக்க முடிவு செய்திருந்தார். ஆனால், அதற்கு முன்பே அந்த பாம்பு இறந்துவிட்டது.

முன்னதாக அந்த பாம்பு சோபாவில் இருந்து வெளிப்பட்டதையும், அதை பிடித்ததையும் நண்பரின் உதவியுடன் வீடியோவில் பதிவு செய்து வைத்துள்ளார் ஹோலி ரைட்.

இதுபற்றி அவர் கூறுகையில், "இரண்டு மாதமாக என் படுக்கையறையில் மெத்தையில் அந்த பாம்பு வசித்திருக்கிறது. அது பெரிய பாம்பு என்று சொல்ல முடியாது. தெருவில் இருந்து சோபாவை எடுக்கும்போது நன்றாக இருந்தது. மெத்தையை அகற்றியும் பார்த்தோம். அதில் எதுவும் தெரியவில்லை. இந்த வாரம் திடீரென அது வெளிப்பட்டது. மெத்தையின் ஒரு பக்க துணியைக் கிழித்து பாம்பை வெளியில் எடுத்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது இறந்துவிட்டது" என்றார்.

...

Popular Posts